Saturday, November 25, 2017

பொருள்

பரம்பொருள் என்கையில்,,
இறையும் ஒரு பொருளே!
கரம்கொண்டு தொழுகையில்,
காட்சியெல்லாம் பொருளே!
மரத்தின் வேரென்றும்
மண்ணுக்குள் பொருளே,
விரல்சுண்டிக் காட்டுதல்,
வேண்டப்படும் பொருளே.
இருளறியா பொருளனைத்தும்
வெளிச்சத்தின் பொருளே.
வரம்வேண்டிப் பெறுபவை
வாழ்க்கையின் பொருளே.
உருமாறிப் போனாலும்,
ஒவ்வொன்றும் பொருளே.
பொருள்படக் கூறா,
பொருளிங்கே உண்டோ?
அருள்தரும் பரம்பொருளே,
ஆயுளின் பொருளுணர்த்தும்,
அகமறிந்த மெய்ப்பொருளாம்!.
                               ப.சந்திரசேகரன் .  



2 comments:

  1. Paramporule nirantharam. Meyporulai unarnadavarkku arame Meyporul. Good composition

    ReplyDelete