Friday, November 17, 2017

சொல் தோழா!

சொல் தோழா!
காலில் செருப்புகூட இல்லாமல்,
காலமெல்லாம் சொத்து சேர்த்தாயே !
நீ சேர்த்த சொத்து உன்வாரிசுகள்,
கால் நோகாமல் வாகனத்தில் செல்வதற்கோ?
உன் வாழ்க்கை உன்கையில் என்று சொல்கையில்,
உன்வாழ்கை உனக்கும் தானே?
உன் உடலை நோகடித்து,
உன் சந்ததிக்கு சொத்து சேர்த்தல்,
நீ உன் உடலுக்குச் செய்யும் துரோகம்தானே?
வாழ்நாள் முழுவதும் உன் உயிரை சுமக்கும் உடலுக்கு,
நீ செலுத்தும் மரியாதைதான் என்ன?
தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்பது,
தரம் தாழ்ந்த நிலையே.
ஆனால் தன்னைப் புறக்கணித்து,
ன் வம்சம் வாழ நினைப்பது,
உன் பிறவிக்கே நீ செய்யும் துரோகமன்றோ!
நீ என்ன தொழில் செய்கிறாய் என்பது முக்கியமில்லை;
உன் தொழிலின் உண்மை உன்னை உயர்த்தும்.
இருப்பினும் உன்னையே உதாசீனம் செய்து,
சந்ததிக்கு நீ சேர்க்கும் செல்வம்,
நீ வாழும்போதே  உன்னை சுமக்கும் சவப்பெட்டியே! 
                                                              ப.சந்திரசேகரன் .  

2 comments:

  1. Your poem reminds me of a line of Saint Pattinathar:katharunda oosiyum vaarathe after your death.
    A Chinese proverb:the money u spend becomes yours. The money that u save for others is not your money. Said it rightly that it becomes your coffin and not treasure in the real sense. A descriptive and didactic piece.

    ReplyDelete
  2. Thanks a lot for your absolutelely pertinent views.

    ReplyDelete