Tuesday, November 28, 2017

திருத்தியபடி

அரக்கர்கள் ஆள அறமது வெல்லுமோ?
சுரப்பது அனைத்தும் பாலென் றாகுமோ?
விரக்தியை விதைக்கும் வேட்டையர் ஒன்றாய்,
இருக்கையில் அமர்ந்திட இதயம் பதைக்குமோ ?
நரித்தனம் செய்து நாணயம் புதைப்போர்
நிரப்பிடும் அணிகள் நிலைப்பது நிஜமோ?
உரைத்திடும் அவர்தம் உளறல்கள் கேட்டு
சிரித்தலும் நமக்கு சிந்தனைக் கேடே!

பிரித்து மேய்ந்திடும் பாவிகள் இடையே,
மருத்துவ மனைகளும் மர்ம தேசமே!
சரித்திர ஏட்டினில் சாயம் கலந்திடின்,
கரித்துகள் போன்ற களங்க மனைத்தையும்,
எரித்துச் சாம்பலாய், இழிநிலைக் களைந்து,
திருத்திய பதிவுகள் திறம்படத் தொகுப்போம் !
                                                  ப.சந்திரசேகரன் .  




No comments:

Post a Comment