Monday, October 9, 2017

மாயா.

மனிதனுள்,
மிருகத்தின் எடை கூடிக்கொண்டே செல்கிறது.
மனதை உடல் தின்றுவிட, மாமிசமே மிஞ்சுகிறது.
அசையும் மாமிசத்திற்கு ஆயூதங்களே அரிச்சுவடி.
ஆன்மீகத்தில் அரசியல் சாயமில்லாக் காலங்களில்,
ஆன்மா உடலுக்கு அங்குசமானது.
அரசியல் மதத்தினில் மாமிசம் கலந்திட,
அதுவே ஆலாகால விஷமானது.
விடியலுக்குத் தேவை,
வியர்வையைப் போற்றிடும் உடல்.
உழைப்பினில் உலகை உள்ளடக்கும் உடல்.
உடலே ஆயுதமானால் உலகம் பாழாகி,
கடலில் கரைத்த  பெருங்காயமாகுமோ,
விடையறியா மாயமாய் மனம்?
                                                  ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment