நட்புகள் கூடிட , நன்மைகள் கோடி,
உட்புறம் ஒளிபெற, உலகுக்கது ஒளியாம்.
அற்புதம் அனைத்தும் அன்பினில் அரும்பிட,
விற்பனைக் கடங்கா வியப்பினைப் போன்று,
சிற்பியின் உளியினில், சீர்பெறும் இறைமையை,
பொற்பாதம் தொட்டு புதுப் பொலிவடைவோம்!
நிற்பதும் நடப்பதும் நீதியின் நிழலெனின்,
கற்பதும் கேட்பதும் காலத்தில் நிலைத்து,
முற்பகல் வினையின் முட்கள் களைந்து,
கற்புடன் தீபத்தை காணிக்கை ஆக்குமாம் !
தற்புகழ் தோற்பது தவப்பயன் ஆகிட,
நற்பணி யாற்றலே தீபத்தின் ஒளியாம்.
ப.சந்திரசேகரன் .
உட்புறம் ஒளிபெற, உலகுக்கது ஒளியாம்.
அற்புதம் அனைத்தும் அன்பினில் அரும்பிட,
விற்பனைக் கடங்கா வியப்பினைப் போன்று,
சிற்பியின் உளியினில், சீர்பெறும் இறைமையை,
பொற்பாதம் தொட்டு புதுப் பொலிவடைவோம்!
நிற்பதும் நடப்பதும் நீதியின் நிழலெனின்,
கற்பதும் கேட்பதும் காலத்தில் நிலைத்து,
முற்பகல் வினையின் முட்கள் களைந்து,
கற்புடன் தீபத்தை காணிக்கை ஆக்குமாம் !
தற்புகழ் தோற்பது தவப்பயன் ஆகிட,
நற்பணி யாற்றலே தீபத்தின் ஒளியாம்.
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment