Friday, October 6, 2017

தேவியின் மகிமை

 

     காலம் காலமாக தேவி வழிபாடு நடைமுறையில் உள்ளது. மத நூல்களும், புராணங்களும், இறைவழிபாட்டுப் பாடல்களும், இந்த தேவி வழிபாடு, அழகும் சத்தியமும் ஒருங்கிணைந்து தேவியின் வடிவாக உச்சமடையும் அகநிலை அனுபவத்திலிருந்து சுரக்கின்றது என்று, வெளிப்படுத்துகின்றன.
    'தேவி பகவத்கீதையில்', தேவி தனது தந்தையார் ஹிமாவனிடம் இவ்வாறு உரைக்கிறார். "மலைகளின் அரசனே! இந்த அகிலமும் அசையும், அசையா அனைத்தும், எனது மாயசக்தியால் உருவாக்கப்படுகிறது.இந்த மாயை என்னுள் கருத்தரிக்கிறதேயல்லாது, உண்மையிலேயே என்னிடமிருந்து மாறுபடுவதோ பிரிக்கப்படுவதோ இல்லை.எனவே நானே இங்கு சர்வ சித்தி யாகிறேன்.நடைமுறையில்  மாயா என்று தோன்றினாலும்,என்னையன்றி வேறு சித்தியில்லை".மேலும் ஹிமாவனிடம் தேவி கூறுவதாவது "எப்பொழு தெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலையெடுக்கிறதோ, நான் வேறு வடிவங்களில், மாறு வேடங்களில், உருவெடுக்கிறேன்"
   "இது பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா அவ்வப்போது, தர்மம் தாழ்கையில் அதனை நிலைநிறுத்த தான் தோன்றுவதாக, பிரசித்திபெற்ற வாக்காகக் குறிப்பிடுவதற்கு, நேரிடையாகத் தொடர்புடை யதாகும்" என்று ஒரு சொற்பொழிவில், திரு B. சுந்தர்குமார் குறிப்பிட்டுள்ளார். எனவே தேவியின் அவதாரங்களும் மாறு வேடங்களும், குறிப்பிட்ட தேவைகளுக்கேயாகும்.
     இதனைப் பின்பற்றி திரேதா யுகத்தில் தேவி, ராமனின் வடிவமெடுப்ப தாகவும் சிவபெருமான் சீதையின் உருவமெடுப்பதாகவும், மற்றும் நந்தி அனுமன் வடிவமேற்பதாகவும், ஒரு சிந்தனைப்பள்ளி ஒப்புக்கொள்கிறது. இக்கருத்தினை மேலும் மேம்படுத்தி, இராவணன் சிவபெருமான் மீதுள்ள பக்தியினாலேயே, அவர்  வடிவமேற்றுள்ள சீதையினை இலங்கைக்கு கடத்துவதாகவும், வால்மீகி இராமாயணத்தை மேற்கோள் காட்டி விளக்குரைஞர்கள்  கருத்து தெரிவிக்கின்றனர் .அயோத்யா காண்டத்தில் இராமன் தனது கதாபாத்திரத்தினை செவ்வனே நடித்திடும் வகையில் சீதையை வனவாசத்திற்கு கூட்டிச் செல்ல மறுக்கிறான்.
   பின்னர் சீதையும் தனது மூலமுதலான உணர்வினைப் பெற்று, தான் நாடகத்தை அரங்கேற்றுகிறோம் என்பதையும் மறந்து, இராமன் ஆணுடையில் இருக்கும் ஒரு பெண் மட்டுமே என்றும், இந்த உண்மையினை அவளது தந்தை பார்க்கத் தவறிவிட்டார் என்றும் கூறுகிறாள்.
 {  'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 04,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான "Supremacy of Devi"  எனும் கட்டுரையின் சுமாரான தமிழாக்கம் ' }

                                                                                                           ப.சந்திரசேகரன் .  

2 comments: