Monday, October 30, 2017

அன்னையின் பரிசு .



   தமிழகத்தின் ஸ்ரீவைகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த சண்முக கவிராயர் எனும் புனிதரின்  மனையாளும்,  மதம் போற்றும் மனமுடையவராக இருந்தார். அவர்கள் தங்கள் மகனுக்கு குமர குருபரர் என்று பெயர் சூட்டினர். ஆனால் குழந்தை பேசமுடியாத நிலையினைக்கண்டு, பெற்றோர் பெரிதும் கவலையுற்றனர். அவர்கள் மகனுக்காக,  சண்முகநாதனை வழிபட திருச்செந்தூர் சென்றனர்.
    ஒருநாள்  குமரகுருபரர் பேசத் தொடங்கினார்.  அவர் கவிஞர் ஆனார்.  சண்முகநாதனுக்கு தனது நன்றியைத் தெரிவிக்க, நாதனைப்புகழ்ந்து கவிதை புனைந்து, அக்கவிதைத் தொகுப்பினை 'கந்தர் கலிவெண்பா ' என அழைத்தார். அத்தொகுப்பின் இறுதிப்பாடலில்,"இறைவா உன் தாமரைப்பாதத்தைக் காண்பித்து எனக்கு ஆசி அருள்வாயாக" என்று வேண்டினார்.
   குமரகுருபரர்  தனது ஆசிரியர் மாசிலாமணி தேசிகரிடம், மிகுந்த மரியாதை கொண்டு, அவருக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான், 'பண்டார
மும்மணிக்கோவை' எனும் கவிதை புனைந்தார்.
    குமரகுருபரர் மதுரையில் இருந்தபோது  'மீனாட்சி பிள்ளைத்  தமிழ்' எனும் கவிதை புனைந்தார். அவர் இக்கவிதைத் தொகுப்பை புனையும்போது, தேவி ஒரு சிறுமியாக இருந்தார் என்கிறார்,திரு. மலையமான் தனது சொற்பொழிவில். தேவி  மீனாட்சியே இக்கவிதை தொகுப்பினை கேட்டு,  ரசித்ததாகச் சொல்லப்படுகிறது. குமார குருபரரின் அற்பணிப்பில்  திளைத்த தேவி, அவருக்கு ஒரு முத்து மாலையினை பரிசாக அளித்தார்.
   இப்புனிதர் வாரனாசி சென்று அங்கு நீண்டகாலம் தங்கியிருந்தார். வாரனாசியிலும் தனது ஆன்மீகச் சேவையினைத் தொடர்ந்தார். அங்கே இருக்கையில், 'காசி கலம்பகம்' எனும் நூலையும், விநாயகர் பற்றிய படைப்பையும் உருவாக்கினார். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டது, துரதிஷ்டவசமாக நமக்கு கிட்டாத இழப்பாகிவிட்டது.
   குமரகுருபரர் வாரனாசியில், இந்தியிலும் தனது சொற்பொழிவுகளை வழங்கினார். கம்பராமாயணத்தைப் பற்றிய அவரது சொற்பொழிவுகள் துளசிதாசரை வெகுவாகக் கவர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தியைத் தாமொழியாகக் கொண்டவர் முன்பாக,இம்மேதை ஆற்றிய சொற்பொழிவு களே,அவருக்குக் கிடைத்த புகழாரமாகும். 
'இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 26,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான " A Gift from the Goddess"  எனும் கட்டுரையின்  தமிழாக்கம்'}
                                                                                         ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment