Monday, October 23, 2017

சொல் தோழா!

சொல் தோழா!
உரிமை உனக்கும் எனக்கும் பொதுவன்றோ ! 
உன்கை ஓங்கிட என் கரங்கள் கட்டுமோ ?
என்குரல் எழுப்பிட, உன்குரல் ஆணையோ?
அரியணை ஏறிட ஆணவம் மகுடமோ?
பறிபோன உரிமைகள் பாவத்தின் பாரமோ?
சரியென்றும் தவறென்றும் இருவழிகள் இருக்க,
பதவியில் பயணிக்க இருவழியும் சரிவழியோ?
கட்டவிழ்த்த காளைக்கு கொம்புகள் ஆளுமெனில்
கட்டிய கரங்களை, காத்திடக் கால்முளைக்கும்.
எதிர்த்திடும் உரிமைகள் இயல்பென நீ உணர,
விதித்திடும் ஆணைகள் வெறுப்பினைக் வேரறுக்கும்.
எதிர்ப்பினை நீ நெறிக்க, புதுப்புது பிழம்பாகும்
என்னுரிமை எனதாகின் உன் உயரம் உனதாகும்.
என்னுரிமை நீபறிக்க உன் இரங்கட்பா எனதாகும். 
                                                                 ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment