Friday, May 1, 2020

மே தினக் கணக்கு

{வாழ்க நல் உழைப்போர்!}

மூலதனத்தில்,  
தனமே  மூலம்.  
மே  தினத்தில்,  
உழைப்பே லம்!
வியர்வைத் துளிகளும்
மணித் துளிகளும்,
உழைப்பின் தடத்தினை,
ஊன்றிப் பதிக்கும்.
தடங்களில் தடங்கல்,
தடுப்பெனத்  தேக்கும்.
தனமும் உழைப்பும்,
எதிரெதிர்ப் பாதையில்
போர்க்களம் காணும்.
மணித்துளி கணக்கினில்
உழைப்பினை உறிஞ்சிட,
மானுடம் காண்பது
கண்ணீர் துளிகள்!
அறுவடைக் கணக்கில் 
ஆட்படைக் கனக்கும்;
உற்பத்திக் கணக்கில் 
ஊர்ப்பசிக் கனக்கும்;
மணித்துளி தன்னில்
கரையவோ வியர்வை?    
வியர்வைத் துளிகளில்,
மணித்துளி காண்பதே,
உழைப்பினை போற்றும்
மேதினக் கணக்காம்!
ப.சந்திரசேகரன் . 

1 comment:

  1. அருமை, உண்மை , யதார்த்தம், வரிக்கு வரி... வார்த்தைக்கு வார்த்தை.. அசாத்திய மான கணக்கு இந்த மே தின கணக்கு.

    ReplyDelete