Thursday, May 14, 2020

அழகின் முகம்

அழகுக்கு,
அகமே முகமாகும்
முகமே சுகமாகும். 
அழகுக்கு, 
அழகே சாமாம்;
அதற்கில்லை சாதனமாம்.
அரிதாரம், 
அழகின் அமானம்;
பின்னர்,பூசுவதேன் ?
பூசாது, 
வேடங்கள் பேசாது;
கூட்டங்கள் கூடாது.
பேச்சிற்கும், 
இங்குண்டு அரிதாரம்;
இல்லையேன் விவகாரம்.
நாசுக்காய்ப் பேசுபவர், 
நாவினிக்கப் பேசிடுவர்; 
காசுக்குப் பேசுபவர் 
கச்சிதமாய்ப் பேசி, 
காதுக்குள் கருத்தொலியை  
கடலலையாய் வீசிடுவர். 
உள்ளிருந்து உறங்கும் 
உடையறியா உண்மைகளை,
பொய்கலந்து அதுபூசும்.
பூசுகையில், 
பேசாது உண்மையிங்கே; 
பேசத்  தொடங்கினால், 
கூசுமே,
அழன் சாதனம். 
அழகறியா அவலத்தில்!
                 ப.சந்திரசேகரன் 

1 comment:

  1. அழகு... அழகு... அழகுக்கு அழகு.. வார்த்தைக்கு வார்த்தை வரிசை கட்டிய அழகு...

    ReplyDelete