கடல் அலைகளை
முடுக்கிவிடுவது யார்,
கவலைகளையும் சேர்த்து?
புயலுக்கு பிள்ளையார் சுழி
போடும்போதே,
அதன் வேகமும்
வரையப் படுகிறதோ?
எங்கோ நிலைகொண்டு,
எங்கோ படையெடுத்து,
எல்லாம் அழித்து,
எல்லோரையும் எதிர்த்து
நிலைகுலையைச் செய்து,
இயற்கையை இயற்கையே
பதம்பார்க்கும் படலத்திற்கு,
வடிவைமைத்துக் கொடுப்பது யார்?
வெப்பத்தின் சலனமும்
வேகத்தின் சதியும்,
பலமாய் பலவீனமாய்,
தலைதெறிக்கும் தாடகையாய்
தரணியை புரட்டிப்போடும்
புயல்களுக்கு,
அம்பன் கொம்பனென
பெயர் சூட்டுவதைத் தவிர,
புயலின் பாய்ச்சலில்
மானுடம் கண்டது
மீளாக் கடுந்துயரே.
ப.சந்திரசேகரன் .
முடுக்கிவிடுவது யார்,
கவலைகளையும் சேர்த்து?
புயலுக்கு பிள்ளையார் சுழி
போடும்போதே,
அதன் வேகமும்
வரையப் படுகிறதோ?
எங்கோ நிலைகொண்டு,
எங்கோ படையெடுத்து,
எல்லாம் அழித்து,
எல்லோரையும் எதிர்த்து
நிலைகுலையைச் செய்து,
இயற்கையை இயற்கையே
பதம்பார்க்கும் படலத்திற்கு,
வடிவைமைத்துக் கொடுப்பது யார்?
வெப்பத்தின் சலனமும்
வேகத்தின் சதியும்,
பலமாய் பலவீனமாய்,
தலைதெறிக்கும் தாடகையாய்
தரணியை புரட்டிப்போடும்
புயல்களுக்கு,
அம்பன் கொம்பனென
பெயர் சூட்டுவதைத் தவிர,
புயலின் பாய்ச்சலில்
மானுடம் கண்டது
மீளாக் கடுந்துயரே.
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment