Monday, December 31, 2018

புத்தாண்டுக் கனவு

மல்யுத்தம் பெருக்கி மண்ணாள முனைவோரின்
சொல்யுத்தம் தோற்று சுயநலங்கள் சுருங்கிடவே,
இல்லாதது இயலாதது இல்லாமல் போகவும்,
பொல்லாதது பொய்யானது பொய்யாகிப் போகவும்,
நில்லாதது நிலைக்காதது நெஞ்சைவிட் டகலாவும்,
கல்லானது கடவுளென கனிவாக இனிக்கவும்,
வில்லெடுத்த விஜயனின் வீறுகொண்ட அம்பென,
துல்லியக் குறிக்கோள்கள் துணிவுடன் வெல்லட்டும்!
எல்லார்க்கும் எல்லாமும் கிட்டாது போயினும்,
எல்லோரும் எல்லாமும் பெற்றிடும் முயற்சியில்,
வல்லானின் வழித்தடம் வரம்பினைக் கடக்காது,
நல்லோரும் நல்வாழ்க்கை நிலமெங்கும் பெற்றிட,
பல்லுயிரும் ஓம்பும் பரிவுடையோர் பெருகிடும்,
நல்லுலகைக் காண்பதே புத்தாண்டுக் கனவாம்!

ப.சந்திரசேகரன் .    

3 comments: