எங்கள் ஊர்,
தமிழை வென்றவன் தரிசித்த ஊர்;
தமிழ் வென்றவனை தரிசித்த ஊர்.
மத்தப் பதினெட்டும்
பதினெண் "கீழ்" கணக்காம்!
பரங்குன்றமோ
பரணியின் மேலாம்!
மொத்தமாய் மோதிப்பார்க்க
மனமின்றிப் போக,
ஒத்தையாய் என்னுடன்
மொத்தமாய் மோதுவரோ?
எத்தனை துயர்கண்டோம்
சத்தமாய்ப் புயல்தாக்க!
சுத்தமாய் இழந்து நின்றும்,
மெத்தனமாய் இருந்துவிட்டீர்!
என் மாநில மக்களே,
பொங்கலுக்கு உங்களுக்கு ஆயிரம்.
எங்களுக்கோ,
பொங்கலும் வெறும் துயரம்.
நடத்தை விதி என்று
நலிந்துக் காய்கிறோம்.
மொத்தமாய்த் தருவரோ,
வாக்குச் சீட்டை அடகுவைக்க!
ஒத்தையாய் நின்றாலும்,
உரமோடு நிற்கிறோம்.
ஏனென்றால் எங்கள் ஊர்,
தமிழை வென்றவன் தரிசித்த ஊர்!
தமிழ் வென்றவனை தரிசித்த ஊர்!.
ப.சந்திரசேகரன் .
பி.கு :-07/01/2019
புயலுடன் மோதிக்களைத்த எனக்கும்,தேர்தலில் மோத அவகாசம் .
நன்றி,தேர்தல் ஆணையம் .
தமிழை வென்றவன் தரிசித்த ஊர்;
தமிழ் வென்றவனை தரிசித்த ஊர்.
மத்தப் பதினெட்டும்
பதினெண் "கீழ்" கணக்காம்!
பரங்குன்றமோ
பரணியின் மேலாம்!
மொத்தமாய் மோதிப்பார்க்க
மனமின்றிப் போக,
ஒத்தையாய் என்னுடன்
மொத்தமாய் மோதுவரோ?
எத்தனை துயர்கண்டோம்
சத்தமாய்ப் புயல்தாக்க!
சுத்தமாய் இழந்து நின்றும்,
மெத்தனமாய் இருந்துவிட்டீர்!
என் மாநில மக்களே,
பொங்கலுக்கு உங்களுக்கு ஆயிரம்.
எங்களுக்கோ,
பொங்கலும் வெறும் துயரம்.
நடத்தை விதி என்று
நலிந்துக் காய்கிறோம்.
மொத்தமாய்த் தருவரோ,
வாக்குச் சீட்டை அடகுவைக்க!
ஒத்தையாய் நின்றாலும்,
உரமோடு நிற்கிறோம்.
ஏனென்றால் எங்கள் ஊர்,
தமிழை வென்றவன் தரிசித்த ஊர்!
தமிழ் வென்றவனை தரிசித்த ஊர்!.
ப.சந்திரசேகரன் .
பி.கு :-07/01/2019
புயலுடன் மோதிக்களைத்த எனக்கும்,தேர்தலில் மோத அவகாசம் .
நன்றி,தேர்தல் ஆணையம் .
No comments:
Post a Comment