வெளுக்குமோ கிழக்கு வெளியேற்ற அழுக்கு ?
வெளுத்தது பாலென நினைப்போர் தமக்கு,
பளிச்செனப் படுமோ பாவிகள் படலம்?
ஒளித்தது எல்லாம் ஒருநாள் வெளிவர,
வெளிச்சத் தீயினில் வேடங்கள் மாயும்.
இளித்திடும் பொய்யரின் ஈனக் கறைகளை துளிர்த்திடும் தூய்மை துவைத்தே கரைக்கும் .
உளிகள் மட்டுமே சிற்பங்க ளாகுமோ?
சுளுவுடன் செதுக்கிடும் சிற்பங்க ளூடே,
ஒளியுடன் காண்பது ஓங்கிய கரமே!
தெளிவுறும் அறிவென தெறித்தநல் சூரியன் ,
அளவிலா அதிர்வுடன் கதிர்களாய்த் தோன்றி,
கிளைகளாய் அடர்ந்த குழப்பம் களைந்து,
சளைக்கா முயற்சிகள் சான்றுக ளாக்கும்.
விளையும் பயிர்கள்,விதைகளின் வீறுடன்,
அளித்திடும் நன்மைகள்,ஆதவன் கணக்கே!
ப.சந்திரசேகரன் .
வெளுத்தது பாலென நினைப்போர் தமக்கு,
பளிச்செனப் படுமோ பாவிகள் படலம்?
ஒளித்தது எல்லாம் ஒருநாள் வெளிவர,
வெளிச்சத் தீயினில் வேடங்கள் மாயும்.
இளித்திடும் பொய்யரின் ஈனக் கறைகளை துளிர்த்திடும் தூய்மை துவைத்தே கரைக்கும் .
உளிகள் மட்டுமே சிற்பங்க ளாகுமோ?
சுளுவுடன் செதுக்கிடும் சிற்பங்க ளூடே,
ஒளியுடன் காண்பது ஓங்கிய கரமே!
தெளிவுறும் அறிவென தெறித்தநல் சூரியன் ,
அளவிலா அதிர்வுடன் கதிர்களாய்த் தோன்றி,
கிளைகளாய் அடர்ந்த குழப்பம் களைந்து,
சளைக்கா முயற்சிகள் சான்றுக ளாக்கும்.
விளையும் பயிர்கள்,விதைகளின் வீறுடன்,
அளித்திடும் நன்மைகள்,ஆதவன் கணக்கே!
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment