{இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்}
புயலும் மழையும் கொடுமையில் பொங்கிடின் ,
வயலும் பயிரும் பொறுமையில் பொங்கும்;
வயிற்றுப் பசியும் வறுமையும் பொங்கிடின் ,
அயரா உழைப்பு அதிர்வுடன் பொங்கும்;
இயலாக் கனவுகள் இதமாய்ப் பொங்கிடின் ,
துயிலாக் கடமைகள் துணிவுடன் பொங்கும்.
நயம்படப் பொங்கிடும் நல்வழிச் சிந்தனை,
வியத்தகு வினையாய் விரைவினில் பொங்கும்;
கயல்விழிக் கனவுகள் காதலில் பொங்கிடின்
மயங்கிடும் மகிழ்ச்சிகள் மனதினில் பொங்கும்;
சுயநலம் களைந்து சுற்றமுடன் பொங்கிடின்,
தயங்கிய உறவுகள் திரண்டெழப் பொங்கும்!
செயற்கை மனிதரின் பொய்முகப் பொங்கலால்
இயற்கையின் சீற்றம் பொங்கிப் பாய்ந்திட,
முயற்சியில் பொங்குதல் முப்போகப் பயிராம்;
துயரிடைத் தோன்றிடும் துணிச்சலின் பொங்கலில்,
பெயர்ந்ததோர் மண்ணில்,பெரும்பயிர் பொங்கிடும் ,
வியர்வையின் வீரமே,தைத்திங்கள் பொங்கலாம்!
ப.சந்திரசேகரன்
Happy Pongal!
ReplyDelete