Monday, December 3, 2018

குளியல்


அருவியில் குளிக்கையில்,நீரின் ஆவேசம்; 
ஆற்றினில் குளிக்கையில்,நீருடன் கைப்பேசும். 
கடலினுள் குளிக்கையில்,கடந்திடும் அலைசீறும் 
குளத்தினுள் குளிக்கையில்,படிகளில் பரவசம்; கிணற்றில் குளிக்கையில்,முழுவுடல் கிறங்கும்.
நீச்சல் குளத்தினில்,விழுந்தெழும் வேகத்தில், 
உச்சிமுதல் பாதம்வரை,நீரோடு போர்புரியும். 
குழாயில் குளிக்கையில்,குதூகலம் குறைவாகி,  
மழைநீரில் மறுகுளியல்,நந்திடவே மனமேங்கும்.
தீயில் குளித்தாலோ,மறுகுளியல் மாயமாகும்.
குளியலின் குணமனைத்தும்,குளிப்போர் மாட்டே! முளைத்திடும் முள்செடியும்,குளித்திடும் மழைநீரில்.        
ஆறறியா ஊரோடு,ஊரறியா ஊற்றுநீரும்,
நீரறியாத் தலையும்,தலையறியாத் தருமமும்,
வேரறியா மண்ணோடு,வறண்டவழிப் போயிடுமே!
பிறப்பின் பெயர்சொல்லி,பூப்பினைப் பறைசாற்றி, 
நீரோடும் நெறியோடும்,நாள்குறித்துக் குளிக்க, 
சேர்ந்திடும் களங்கத்தை கழித்திடும் புனிதநீர்.
வாழ்க்கையின் சங்கதிகள்,கலசத்தில் சாம்பலென,
கூத்துகள்  முடிந்தபின்னே,குளித்திடும் திதிகளுடன்;
நீத்தாரின் நினைவுகளும்,காத்தோரின் காரியமும்,
பூத்துக் குளித்திடுமாம்,புனிதநீர் சாகரத்தில்! 
ப.சந்திரசேகரன் .        

No comments:

Post a Comment