தோற்கலாம் வா!
தோல்வி ஒரு சூழல்.
வெற்றியின் வழியினைச்
சூழ்ந்திடும் மேகம்;
தொற்றிடும் நோயெனப்
பரவிடும் வேகம்.
தோற்கலாம் வா!
தோல்வி ஒரு தேடல்.
முன்னால் நிற்பவர்கள்
நம்மை நடத்துகிறார்களா,
நகைக்கிறார்களா?
பின்னால் வருபவர்கள்
நம்மைத் தாங்குகிறார்களா
தாண்டுகிறார்களா?,
நாம் விழுந்ததற்கு காரணம்,
பாதையில் பள்ளமா?
பதைத்திடும் உள்ளமா?
விழுந்து எழுந்தோமெனில்
தோல்வி ஒரு பாடம்;
விழுந்து மடிந்தோமெனில்
தோல்வி ஒரு சாபம்,
தோற்கலாம் வா!
தோல்வி ஒரு தேடல்.
ப.சந்திரசேகரன் .
தோல்வி ஒரு சூழல்.
வெற்றியின் வழியினைச்
சூழ்ந்திடும் மேகம்;
தொற்றிடும் நோயெனப்
பரவிடும் வேகம்.
தோற்கலாம் வா!
தோல்வி ஒரு தேடல்.
முன்னால் நிற்பவர்கள்
நம்மை நடத்துகிறார்களா,
நகைக்கிறார்களா?
பின்னால் வருபவர்கள்
நம்மைத் தாங்குகிறார்களா
தாண்டுகிறார்களா?,
நாம் விழுந்ததற்கு காரணம்,
பாதையில் பள்ளமா?
பதைத்திடும் உள்ளமா?
விழுந்து எழுந்தோமெனில்
தோல்வி ஒரு பாடம்;
விழுந்து மடிந்தோமெனில்
தோல்வி ஒரு சாபம்,
தோற்கலாம் வா!
தோல்வி ஒரு தேடல்.
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment