நல்லதுக்கும் கெட்டத்துக்கும் நாள்குறிப்ப தாரோ?
நம்பிடுவோர் சொல்லுவது கடவுளெனும் பேரோ?
வாழ்வதற்கும் சாவதற்கும் தனித்தனி போரோ?
வீழும்போது தாங்குவது வேழமெனும் வேரோ?
எல்லைக்கொரு கல்லுவச்சு பேருவச்சா,ஊரோ?
வம்புச்சண்டை செய்திடவே வரப்பு வைப்பாரோ?
வாழைமரம் வெட்டியபின் மிஞ்சுவது நாரோ?
ஏழையோட வாழ்வுமட்டும் பட்டுப்போன பயிரோ?.
நெல்லுக்கும் கரும்புக்கும் நெருக்கமே சேறோ?
பொம்பளைங்க பேச்சுக்குள்ளே புதிர்கள் உள்கூரோ?
பொழப்பில்லா ஆம்பிளையை புருஷனென் பாரோ?
இழப்பில்லா வாழ்கையிங்கே யாரும் கண்டீரோ?
கல்லுக்கும் கடவுளுக்கும் கணக்குகள் வேறோ?
நம்பவைச்சு கழுத்தறுப்போர்,நல்லவரா வாரோ?
தாழ்ந்தவர் தவிக்கையிலே துக்கம் துடைப்போரே, தோழமைக்கு தோள்கொடுப்பர் எனச்சொல் வீரோ?
ப.சந்திரசேகரன் .
நம்பிடுவோர் சொல்லுவது கடவுளெனும் பேரோ?
வாழ்வதற்கும் சாவதற்கும் தனித்தனி போரோ?
வீழும்போது தாங்குவது வேழமெனும் வேரோ?
எல்லைக்கொரு கல்லுவச்சு பேருவச்சா,ஊரோ?
வம்புச்சண்டை செய்திடவே வரப்பு வைப்பாரோ?
வாழைமரம் வெட்டியபின் மிஞ்சுவது நாரோ?
ஏழையோட வாழ்வுமட்டும் பட்டுப்போன பயிரோ?.
நெல்லுக்கும் கரும்புக்கும் நெருக்கமே சேறோ?
பொம்பளைங்க பேச்சுக்குள்ளே புதிர்கள் உள்கூரோ?
பொழப்பில்லா ஆம்பிளையை புருஷனென் பாரோ?
இழப்பில்லா வாழ்கையிங்கே யாரும் கண்டீரோ?
நம்பவைச்சு கழுத்தறுப்போர்,நல்லவரா வாரோ?
தாழ்ந்தவர் தவிக்கையிலே துக்கம் துடைப்போரே, தோழமைக்கு தோள்கொடுப்பர் எனச்சொல் வீரோ?
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment