வாழமரம் வச்சவன
வாழவைக்கும் வாழையின,
வேரோட சாச்சுவுட்டு
வாழையோட அவனுக்கும்,
வாய்க்கரிசி போட்டாச்சு;
தென்னமர தோப்புவெச்சு
தெனாவட்டா இருந்தவன,
படுக்கப்போட்ட தென்னையோட,
பாடையில வச்சாச்சு;
நெல்லுவயல் நெறயவச்சு
நெஞ்சுநிமித்தி நின்னவன,
நெல்லோட சேத்துவெச்சு,
தண்ணிக்குள்ள மூழ்கவைச்சு,
தெவசம் கொடுத்தாச்சு;
ஏழைபாழ வீட்டையெல்லாம்
எடுத்தெறிஞ்சு போட்டபின்ன,
எல்லாரும் வீதியில,
விதியத்து கதியத்து
வயிறெரிஞ்சு நிக்கயில,
வேட்டிய மடிச்சுக்கட்டி
வேறுதெச போயாச்சு.
சேதமெல்லாம் பார்வையிட்டு
பேதமெல்லாம் பேச்சாகி
ஊர்முழுக்க கேக்கயில,
இதுவும் கடக்குமென,
எல்லாரும் நெனக்கயில
இன்னொரு பேருவச்சு,
எங்கவெச்சு வெளுப்பேனோ
எனக்கே தெரியாது!
ப.சந்திரசேகரன் .
வாழவைக்கும் வாழையின,
வேரோட சாச்சுவுட்டு
வாழையோட அவனுக்கும்,
வாய்க்கரிசி போட்டாச்சு;
தென்னமர தோப்புவெச்சு
தெனாவட்டா இருந்தவன,
படுக்கப்போட்ட தென்னையோட,
பாடையில வச்சாச்சு;
நெல்லுவயல் நெறயவச்சு
நெஞ்சுநிமித்தி நின்னவன,
நெல்லோட சேத்துவெச்சு,
தண்ணிக்குள்ள மூழ்கவைச்சு,
தெவசம் கொடுத்தாச்சு;
ஏழைபாழ வீட்டையெல்லாம்
எடுத்தெறிஞ்சு போட்டபின்ன,
எல்லாரும் வீதியில,
விதியத்து கதியத்து
வயிறெரிஞ்சு நிக்கயில,
வேட்டிய மடிச்சுக்கட்டி
வேறுதெச போயாச்சு.
சேதமெல்லாம் பார்வையிட்டு
பேதமெல்லாம் பேச்சாகி
ஊர்முழுக்க கேக்கயில,
இதுவும் கடக்குமென,
எல்லாரும் நெனக்கயில
இன்னொரு பேருவச்சு,
எங்கவெச்சு வெளுப்பேனோ
எனக்கே தெரியாது!
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment