Wednesday, November 14, 2018

நிறைவே,வரம்

பகுதிநேர வேலையிலும் பற்றுதல் போற்றும்
தகுதியின் வெளிச்சம் தகைமை உடைத்தே!
வெகுமதி ஒன்றே வரையறை யாயின்,
மிகுதியாய்க் காண்பது,மண்டிடும் பொருளே!
இகம்ரும் சுகமே இனியதோர் ஸ்வரமாம்.
மகத்துவ மனைத்தும் மகிழ்ச்சியில் மலர்வதே;
சகித்திடும் சோகம் சிரிப்பினைச் சேர்த்திடின்.
நகச்சுற்றி போலொரு நரகம் அகலுமாம். 

அகத்தின் அழகினைக் கூட்டிடும் அமைதி,

திகைப்பினில் பலரை ஆழ்த்துதல் உறுதி.
நகைத்திடும் நரவலை நடுவழிக் கண்டிட,
பகைத்திடா பார்வை பாதையை மாற்றும்!
முகத்தினில் சலனம் முழுவதும் களைந்து,
சுகத்தினைப் பகிர்ந்து சுடரும் விளக்கென
புகைந்திடும் பனிப்போர் புறவழி போக்கி, 
நிகழ்ந்திடும் அதிசியம் நிறைவின் மாம் 
 ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment