Wednesday, November 7, 2018

ஒரு மூஞ்சூறின் காதல்

என்காதல் கண்மணியே, 
எலியினத்துத் தேவதையே
உன் கண்ணில் ஏன் 
கத்திரி வெயில்?
ஏதோ உன் செவிகளில்
செதிர்த் தேங்காய் 
உடைத்தாற்போல!
பெருச்சாளிச் சொற்களால்
தாக்கும் உன் நாவிற்கு
பேய்ப்பிடித்துவிட்டதோ?
காதலைச் சொன்னதற்கு
காட்டேரியாய் எகிருகிறாய்.
செருப்பில்லா உன்கால் கண்டு,
பெருமூச்சு விட்டாலும், 
பதறி எனக்கு பழக்கமில்லை! 
வெள்ளைமனம் கொண்ட நான் 
பிள்ளையார் வாகனம்.
எப்பவும் என்னை நீ, 
தாண்டித் தான் போகனும்! 
முழுமுதலோனைத் தரிசிக்க,
மூஷிகனைத் தொழுதாகனும்!
ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment