Tuesday, October 30, 2018

நட்டக்கல்லும் பேசும் 'ஓம்'


                      I

உள்ளிருக்கும் நாதனின் 
ஓமெனும் பரம்பொருள்,  
கல்லுக்குள் ஒளியாகி, 
நாளுமேற்றும் புஷ்பத்தை 
நாடிவந்துச் சூடிட 
சுற்றிவந்து மொணமொணன்று, 
சொல்லிடும் மந்திரத்தை  
மனமுவந்து கேட்டிட, 
வல்லமை வேரூன்றி,
சக்தியுடன் இணைந்ததோர்,
ட்டக்கல்லும்  பேசும் 'ஓம்',
நான்குஎல்லைக்  காவலாம். 
                      II
ஊனுக்குள் ஒளிந்திருப்போன்
உணர்வுகளின் உயிராகி,  
கருப்பாகி சிகப்பாகி 
தேனுக்குள் இனிப்பாகி,  
தெவிட்டாது தொழுவோரின்  
ஊனிலும்,வானிலும்,
வாயில் காப்போனாய்,
மறுப்பவர் நகைத்திடினும் 
'மதியிலீர்' போற்றிடும், 
மகிமை படைத்திடும்,
மாண்புடை இறைவனாம்! 
ப.சந்திரசேகரன் .      

Sunday, October 28, 2018

The High Five.

God left my soul on vacation.
A monster began to monitor my mind.
Goodness turned a gangster,
Gorging my peace as a glutton.

My temple trips tumbled upon
Unknown fears,lodging my soul
In the terrains of torpid tendencies,
Causing a dumping of frustrations.

I was waiting for a high five with God.
How long the wait was going to be,
Would tell upon the courage counts
That fell further into the fathoms of fear.

Right or wrong each one's routine is a rigmarole
With rambling exits running into rough weather;
On God's return after His sojourn,or my reform,
A high five with God will save my soul from storm.   
P. Chandrasekaran.



Tuesday, October 23, 2018

பகடைக்காய்களும் பலியாடுகளும்

     மகாபாரதத்தில் கர்ணன் பலியாடானான். தாய்தந்தை புறக்கணித்த தனிமனிதன் ஒருவனது பூர்வஜென்ம புண்ணியங்களான தரும சிந்தையும், வள்ளல் வினைகளின் அளப்பறியா சிறப்புகளும், இந்திரன் மூலமாகவும்,கண்ணனின் கருத்தாழக் களவாடல் மூலமாகவும்,சிதைக்கப்பட்டன. சூழ்நிலைக் கைதியான கர்ணன் சூழ்ச்சிகளுக்குப் பகடைக்காயானான். 
     நடைமுறை வாழ்க்கையில் குடும்பத்திலும், சமூகத்திலும்,அரசியலிலும்,யாரேனும் ஒருவரோ அல்லது பலரோ,அன்றாடம் பலியாகின்றனர்.இங்கே பக்திக்கும் மூடநம்பிக்கைகளுக்கும்,எத்தனை பேர் பலியாகின்றனர். இராவணனின் கொடும்பாவி எரிக்கப்போய் இரயில் சக்கரங்களில் பலியாடுகளா னோர் எண்ணிக்கை அதிகமாக,அமிர்தசரஸ் நகரமே அவலத்தில் வீழ்ந்தது.இறைவன் பேரைச் சொல்லி விழாக்காலங்களில் திரளாக ஒன்றுகூடி,கூட்ட நெரிசலில் நசுங்கி மடிதல்,நம்மை நாமே பலியாடு களாக மாற்றிக்கொள்வதல்லாது வேறு என்னவாக இருக்கமுடியும்?இதுவும் ஒருவகையில் எண்ணற் றோரின் மடமை மேலோங்கிய தற்கொலையே. 
    பாலின வன்கொடுமைகளுக்கு பலியாகும் பெண்டிரையும்,அவர்தம் வேதனைகளையும்   நினைக்கையில்,நேர்மையான உள்ளம் கொண்டோ ரின் மனம் இயல்பாகவே பதைக்கக் கூடும்.சில நேரங்களில் வஞ்சகப் பெண்மையின் அவதூறு வலைகளில் ஆண்கள் சிக்கியிருக்கக் கூடுமோ என்ற சந்தேகமும்,பலியாடுகள் இருபாலார் பக்கங்களிலும் இருப்பரோ என்று எண்ணத்தூண்டுகிறது.மனக் குமுறல்களை,உற்ற நட்புடன் பகிர்ந்துகொள்ள இயலாது,தற்கொலைக்கு பலியாவோர் எண்ணிக்கைகளும் கூடிக்கொண்டே வருகின்றன.  
    மற்றவரை முன்னிறுத்தி ஆதாயம் தேடும் மனித குலத்தில்,என்றைக்குமே பலியாடுகளுக்குப்  பஞ்சமில்லை.குடும்பங்களில் மென்மையான மனம் கொண்டோரே மகுடம் சூடிய பலியாடுகள்.சமூக, அரசியல் இயக்கங்களில்,தலைவர்கள் பலியான காலம் மலையேறிவிட்டதால்,இன்றைக்கு தொண்டர் களே பகடைக்காய்கள்.இவர்களே தலைவனுக்காக என்றைக்கும் தடியெடுக்கவும்,சிறைசெல்லவும், தீக்குளிக்கவும்,திமிறிநிற்கும் பலியாடுகள்.  
    அரசியலுக்கு தேவைப்பட்டால்,ஒரு இனமோ வர்க்கமோ அல்லது சிறுபான்மைச் சமூகமோ பலியாகக்கூடும்.இப்படித்தான் ஹிட்லர்  தன்  சொந்த அரசியல் லாபங்களுக்காக,யூத இனத்தையே கொடூர மாய்ப் பலிகொடுத்தான்.இந்த வரலாறே வெட்கப்
படும் இழிசெயலுக்காக,இன்றைக்கும் ஜெர்மன் மக்கள் தலைதாழ்ந்து நிற்கின்றனர்.பலநேரங்களில் நாம் காண்பது,அரசு மேலாண்மையும் இறையாண் மையும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட அரசியலே!இந்த அதர்ம அரசியலில்,குறிப்பிட்ட இனம் சார்ந் தோரும் மதம் சார்ந்தோரும்,அவ்வப்போது பலியாடு களாவதை நாம் காண்கையில்,அவற்றைப் பற்றிக் கேட்கையில்,நாகரீகத்தின் பின்னோக்கிய பயணம் நம்மை நிலைகுலையைச் செய்கிறது.   
    நம் பெருமைமிகு பாரத மண்ணில் குருதிப் 
புனலுக்கும்,கூட்டுக்கொலைகளுக்கும்,பஞ்சமில்லை. விடுதலைப் போராட்டக் காலங்களில்  நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைப் புத்தகத்தின் குற்றமிகுப் பக்கங்களாக் கொள்ளலாம்.ஆனால் 1984 இல், இந்திராகாந்தி அம்மையார் ஓரிரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்பதற்காக,நாடு முழுவதும் சீக்கிய உயிர்கள் வேட்டையாடப்பட்டதும்,அதனைத் தடுப்பதற்கான அரசு நடவடிக்கைகள் காலம் தாழ்ந்தே மேற்கொள்ளப் பட்டதும்,பலியாடுகளின் பரிதாப மரணங்களின் வடுக்களாகும். 
     இதே நிலைதான் பின்னர் குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியச் சகோதரர்கள் பெருமளவில் கொன்று குவிக்கப் பட்டதிலும் உணரப்பட்டது.எப்படிப் பார்த்தாலும் இதுபோன்ற படுகொலை நிகழ்வு களுக்குப்பின்னே,அரசுகளைக்காட்டிலும்,அரசியல் சூழ்ச்சிகளே ஆரம்பப்புள்ளிகளாகி,ஆட்டக்களமாகி, அநியாயங்களை அரங்கேற்று கின்றன.
    எனவே காக்கும் அரசுகளைக்காட்டிலும்,கருணை யின்றி அரசியல் லாபங்களுக்காக காலப்பிழை யாற்றும் களவாணிகளே,கரும்புள்ளிகளாகின்றனர். 'இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே 'எனும் பழைய தமிழ் திரைப்படப் பாடலுக்கேற்ப, குடும்பத்திலும்,சமூகத்திலும் அரசியல் ஆட்டங்களி லும், மடமையிலும்,சூழ்ச்சியிலும் சிக்கி பலியாகும் ஆடுகள்,மனித இனத்தின் களங்கப் புள்ளிகளாம். இந்த சிந்தனைச் சிதரல்களுக்கு வித்திட்ட,மதிப்பிற் குரிய உச்ச நீதிமன்ற,முன்னாள்  நீதிபதி,  திரு.மார்க்கண்டே கட்சுவுக்கு  நன்றியுடன், {Courtesy 'Fanning the Flames,'by Mr..Markandey Kadju,Single File Columns of the Hindu,dated 23rd October 2018}
ப.சந்திரசேகரன் . 

Monday, October 22, 2018

Fake Fundamentals


Being fake is putting others' faith at stake.
A closed door might be like a frozen lake;
But an open door with a cold hand shake,
Makes an unwelcome guest sense a mistake.

Truth these days,is a very tall call to make;
The smile drawn on a face,like snow's flake,
Hides bitterness in a sweet and creamy cake.
It alters warmth into the venom of a snake.

As bogus god men stash secrets for their sake,
Statues of deities in temples fail to stay awake,
To stall their hefty thefts,before each daybreak.
The fall of truth falls everyday,like earthquake.

All is fake in the changing world order all over,
While faith keeps sailing ahead,as a true rower.
P. Chandrasekaran

Friday, October 19, 2018

புழுக்கம் ஏனோ ?

பொரிந்து தள்ளுவர்
பேசிடும் பெண்கள்;
புரிந்து,தள்ளுவர்,
புரியாப் பலவும்.
விரிந்த மனமெனின்
அவர்க்கிணை அவரே!
விரியா அவர்மனம்,
புரிவரோ ஆண்கள்?
குடும்பத் தலைவனை
உடும்பெனப் பற்றும்,
ஆண்மகன் நாவின்
உமையவள் அவளே.
மணமுறும் முன்னே 
கூசிடும் மனமது,
மணந்தவள்  வந்திட
பேசிடக் கூடுமோ,
பெருந்தகை ஆண்மை?
பொரிந்து தள்ளிடினும்,
புரியாப் பெண்மையை,
புரிந்தவள் பெண்ணே!
பெண்ணைப் புரியா
ஆண்மகன் இங்கே,
புரிந்திடக் கூடுமோ
பொரிபவள் அழகு?
புவியதன் பூரிப்பு
பொரிதலின் புரிதலாம் ! 
புரியா ஆண்மைக்கு,
புழுக்கம் ஏனோ? 
ப.சந்திரசேகரன் .      

Tuesday, October 16, 2018

அறிவுத்தேடலில் ஆலயங்கள்.

     'ஆலய தரிசனம் கோடி புண்ணியம்''கோவில் இல்லா ஊரில் குடியிருக்க லாமோ,'போன்ற பழமொழிகளுக்குப் பஞ்சமில்லா மண்ணில், கோவில்கள்,ற்றும் அங்கே குடியிருக்கும் கடவுள்கள் பற்றிய கேள்விகளுக்கும்,சர்ச்சைகளுக்கும், ஐயப்பாடுகளுக்கும்,பஞ்சமில்லை.அறிவுசார்ந்த மனிதர் தமக்கு,அறிவுக்கு ஏற்புடைய விடைகளைக் காண விழையும், வினாக்களை எழுப்பும் தார்மீக உரிமையுண்டு. 
    பெரும்பாலும்,இந்துமதம் சார்ந்த ஆலயங்களைத் தொடர்புபடுத்தியே கேள்விகளும்,சர்ச்சைகளும், நிறைய எழுகின்றன.இதர மதங்களிலும் உள்ளுக் குள்ளே அரசல் புரசலாக மாறுபட்ட விமர்சனங்கள் இருக்கக்கூடும்.ஆனால் அவைகள் பொதுவாக  வெளியே வருவதில்லை.நான் இறைநெறி போற்று பவனாக இருப்பினும்,மதவாதி ல்ல;நாத்திகர் களை வெறுப்பவனும் ல்ல.இருப்பினும்,இந்து ஆலயங்கள் தொடர்பாக, இறைவழிபாடு செய்வோர் சிலரும்,நாத்திகர்கள் பலரும் எழுப்பும் அறிவுசார்ந்த கேள்விகளுக்கு,இவைகள் விடையாகக் கூடுமோ என்று நினைத்து,இங்கே சில கருத்துக்களைப் பதிவுசெய்கிறேன். 
    இறைவன் மொழிப்பாகுபாடுகளைக் ந்தவன் என்கிற நிலையில்,வேத அதிர்வுகளுக்கும்,தேவார, திருவாசக,திவ்யப்பிரபந்த வரிகளுக்கும் இடையேபிரார்த்தனை வழிபாட்டு முறைகளில்,இறைவனை நெருங்குவதில் நிச்சயமாக வேகத் தடைகள் இருக்க வாய்ப்பில்லை.இறைவன் சாதிகளுக்கு அப்பாற்பட்ட வனாகவே இருக்கவேண்டும்;அவ்வாறு இல்லை யெனில்,அவன் இறைவனே இல்லை.
   எனவே,நேர்மையான நெஞ்சத்தோடும்,உண்மை யான இறையன்போடும்,யார் இறைவனின் மூல அமர்வுப்பகுதியை நெருங்கி,பிரார்த்தனை செய்தா லும்,அதனை  இறைவன் ஏற்றுக்கொள்வான் என்பதற்கு,திருக் கண்ணப்பநாயனாரும்,இறை வனைத் தன்னருகே எழுந்தருளச்செய்த நந்தனாரும்,  எடுத்துக்காட்டாவர். 
    அர்ச்சகர்களின் தேர்வுபற்றியும்,வழிபாட்டு முறைகள் பற்றியும் பல்வேறு விதமான கருத்துக் களும், முரண்பட்ட நிலைளும்,செய்திகளும், வழக்குகளும்,தீர்ப்புகளும், நடைமுறை மாற்றங் களும்,மாறிவரும் தலை முறைக்கு ஏற்றவாறு, வலம்வந்து கொண்டிருக்கின்றன.இவற்றை யெல்லாம் கடந்து இறையன்பர்களாலும் நாத்திக நண்பர்களாலும் எழுப்பப்படும் ஒரு முதன்மையான கேள்வி,ஆலயங்களுக்கு வரும் பக்தர்களின்   எண்ணிக்கை குறித்ததாகும்.இந்த கேள்வி பின்வரு மாறு வகைப்படுத்தப்படலாம்.
    எத்தனையோ பெருமாள் கோவில்களும், மாரியம்மன் ஆலயங்களும்,முருகன் வழிபாட்டுத் தங்களும்,புராதன ஆலயங்களும் நிறைந்திருக் கும் பாரத தேசத்தில்,குறிப்பிட்ட சில இந்து ஆலயங்களில் மட்டும் அன்றாடம் மக்கள் திரளாக மூச்சுமுட்டும் அளவிற்குக் கூடுவதேன்?ஊருக்கு ஊர் அம்மன் ஆலயங்கள் கொண்ட தமிழகத்தில் சமயபுரத்திற்குச் செல்லும் பக்தர்கள் கூட்டம் ஏன் அந்த அளவிற்கு புன்னைநல்லூருக்கோ வேறு மாரியம்மன் கோவில்களுக்கோ செல்வதில்லை? குன்றிலும்,குடிலிலும்,கோலோச்சும் முருகனுக்கு, பழனியிலும்  திருச்செந்தூரிலும் கூடும் பக்தர்கள் பலர்,அறுபடை வீடுகளில் மற்ற நான்கினை,ஏன் முக்கிய ஒருசில தினங்களைத் தவிர இதர நாட்களில் கண்டுகொள்வதில்லை?
    பட்டிதொட்டியெல்லாம் பவனிவரும் பெருமாளுக்கு, ஏன் திருப்பதி திருமலையிலும்,ஸ்ரீரெங்கத்திலும், அத்தனை செல்வாக்கு?அனந்தசயனத்தில் பள்ளி கொண்ட ஸ்ரீ ரெங்கநாதருக்கும் ஆர்ப்பரிக்க நிற்கும்  ஸ்ரீ வாரு வெங்கடாசலபதிக்கும் மட்டும் எங்கிருந்து வந்தது அன்றாடம் பல்லாயிரக் கணக்கான பக்தர் களுக்கு அயராது தரிசனம் தரும் மகிமை?இந்த நிலைப்பாடு பக்தர்கள் இறைவன்மீது காட்டும் ஒரவஞ்சனையா?அல்லது குறிப்பிட்ட இந்த ஆலயங்கள் தவிர மற்ற வற்றில் வீற்றிருக்கும் இறைவனின் மகிமைக் குறைவா? இந்த நெருடலான கேள்விகளுக்கு அனுபவபூர்வமான ஆன்மீகவாதி களின் பதில்  பலவாக இருக்கக்கூடும்.
    என்னைப் பொறுத்தவரை இந்த கேள்விகளுக்கு, ஒரு வித்யாசமான உவமையைச் சுட்டிக்காட்டி {வாதத்திற்காக மட்டுமே}விளக்கம் காணலாமோ எனத்தோன்றுகிறது. ஆலயமிங்கே ஆயிரமுண்டு  அரசியல் கட்சிகள் போல;எப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் ஒரே மாதிரியான செல்வாக்கு கிட்டுவதில்லையோ,அதைப்போன்றே எத்தனையோ ஆலயங்களிருந்தும்,ஒருசில மட்டுமே பக்தர்களின் நம்பிக்கையை வெளிக்காட்டும் திருத்தலங்களாக அமைகின்றன. ஒரு நல்ல தலைவன் இல்லையேல் மக்களுக்கு நல்வாழ்வு இல்லை.மக்கள் செல்வாக்கு இல்லாதவன் தலைவனே இல்லை. 
   குறிப்பிட்ட சில ஆலயங்களில் வடிவமைக்கப்பட்ட சிலைகளில்,மின்காந்த சக்தியைப்போன்று ஏதோ ஒன்று  மக்களை வெகுவாகக் கவர்ந்திழுத்து அவர்களின் மனதில் பரவசத்தையும் இனம்புரியா மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவது,பக்தர்களின் எண்ணிக்கை அபரிமிதமாகக் கூடுவதற்கு காரண மாகலாம்.
  சமயபுர மாரியம்மனும்,பழனி ராஜ அலங்காரத்தில் முருகனும், திருப்பதி ஏழுமலையானும் சிலைவடி வத்தில் நம் கண்களைக் களவாடி, சிரசேறி,சில நொடிகள் சிந்தையில் பரவசம் தோற்றுவிப்பதாக எண்ணி எத்தனை கோடி பக்தர்களின் மனம்,வழி பாட்டுக் கடலில் கரைந்திருக்குமோ தெரியாது .
    மனிதன் மீது மனிதன் கொள்ளும் நம்பிக்கை அன்பாக, ஆதரவாக, ஆன்ம நிறைவாக, அமைகிறது. அதுபோலவே, இறைவன் மீது மனிதன் கொள்ளும் நம்பிக்கை, அடர்ந்து பக்தியாகி, ஆன்மபலம் பெருகி, அந்த ஆன்ம பலத்தில்  நல்லெண்ணமும்,நன்னடத் தையும், நேர்மையும் உள்ளடக்கி,பிரார்த்தனை  களாக,இறைவவனைச் சென்றடைகிறது. 
     திரளாக மக்கள் கூடும் ஆலயங்களில், பிரார்த் தனை அணுக்களாகி வீரியம் பெற்று,வணங்கும் தெய்வத்திற்கு விஸ்வரூபத்தை அளிக்கிறது.காலம் காலமாக எண்ணங்களால்,செயல்களால் உயர்ந்த வர்கள்,புண்ணிய சக்தியாகி ஒருசில ஆலயங்களில் அதிக எண்ணிக்கையில் காலெடுத்துவைக்க,ந்த  புண்ணியத்தளங்களின் பெருமையும்,மகிமையும் பிரகாசித்து,அப்பிரகாசத்தை அங்கிருக்கும் மூலக் கடவுளுக்கு சமர்ப்பிக்கிறது .
     இயற்கையையும் மனிதனையும் இறைவன் படைத்தான் என நம்புபவர்கள்,மனிதனே இறைவ னுக்கு விளக்கானான் என்பதையும்,மனிதனின் அன்பும் நம்பிக்கையும் இறைவனின் றுஉருவா னது என்பதையும்,ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.      மனிதன் மனிதனை நம்பினால் மனிதம் தழைக் கிறது.மனிதன் இறைவனை நம்பினால் மனிதனுள்  ஆன்மீகம் தழைக்கிறது.நல்லெண்ணமும் நற்செயல் களும் நலிந்து போயிடின்,இம் மண்ணில் மனிதமும் இல்லை;இறைவனும் இல்லை.
   நெஞ்சில் அன்பைத் தாங்கி அயராது விடும்,  குழந்தை மனம்கொண்டோரின்  மூச்சுக்காற்றில் கூஇறைவன் நிறைந்திருப்பான்.இக்காற்றழுத்தம் அதிகமாகக் காணப்படும் ஆலயங்களில்,இறைவன் சர்வவல்லமையோடு சங்கமிப்பன். 
     இந்த விளக்கங்கள் என் சிந்தனையில் தோன்றிய சிறு அதிர்வுகளின் வெளிப்பாடே,இவை ஒரு சிலரின் அறிவுசார்ந்த கேள்விகளுக்கேனும் விடையாகக் கூடுமோ என்பதே, என் எதிர்பார்ப்பாகும். 
ப.சந்திரசேகரன் . 
                       ======================

Sunday, October 14, 2018

Whither Move the Vedas?

Where did people leave the Vedas
That they instinctively inherited?
Our ways have parted with the Vedas,to woo
The charming waves of the changing ocean of time.
Do the Vedas travel from Kasi to Rameswaram
Through the air that we breathe in and out,
Or through us who breathe in and out,the air?
The vibration of the air is the voice of the Vedas,
Connecting all men of a religion,through a concord.
But the vibrating Vedas die in our discordant notes
Barking caste tunes with coloured visuals.
Today,people sell the Vedas on a competitive pitch,
Without attracting GST ad velorem,for their service.
In a temple where I go off and on,the priests fight for
Their share of offerings of money just in front of me,
But sadly more,straight in front of the deity,
At whom they stammer the Vedas half learnt
Or left half way,in their greedy clamour for money.
The vibration of the Vedas vests with the soul.
Where there is no soul,the Vedas fail to travel,
Be it from Kasi or Rameswaram,flooded with rites.
The mouth disconnects the sanctity of the Vedas
From their vibration,by its unutterable utterances, 
That abuse the Vedas,along with the souls of the dead.
Religion is the elixir that sustains,when everything fails.
When the Vedas fail,waste shrouds a section of the race.
Where the Vedas truly take the souls closer to God,
They travel through the air we breathe in and out
And with us,who breathe in and out the air,
Filled with the fragrance of the Vedas all the way,
From Kasi to Rameswaram,flooded with rites. 
P. Chandrasekaran.

Friday, October 12, 2018

துறவி

மனதின் சுமை மனதளவே ஆகுமாம்!
பழகிப்போன பசிக்கு வயிறோடு பிணக்கில்லை;
தொடரும் தொல்லைகளால் துறவியாகும் மனதிற்கு,
இடரெனும் சொல்லின் இலக்குகள் ஏட்டளவே.

ரையற்ற கவிதையென உள்ளுக்குள் உறைந்து, 
தரையில் படுத்தாலும் வானமே எல்லையென்று,
திரையிட்ட  மனதோடு வாழ்வோர் தமக்கு,
ரைகடந்த  காலமும் கணக்கில் இல்லை.

மனிதனின்  பலம் மனிதமே ஆகுமாம்! 

விழித்திடா விழிகளிடம் பொழுதுக்குப் பகையில்லை;
படருமோ பெயருமோ,பயிரறியாப்  பார்வைக்கு, 
அடர்த்தியின் அளவுகோல், அணுவளவும்  அறிவதில்லை. 

முரிவுகண்ட உறவுகள் முகப்பருவின் வடுக்களாய், 
வரிந்துகட்டி வரிசையில் வழக்காடி வலம்வர, 
உரியடியின் வலியினில்,உடைந்துபோன உள்ளமோ,  
விரைந்து வெளியேறுமாம், வலைகளைக் கடந்து.

ப.சந்திரசேகரன் .  



Monday, October 8, 2018

No More of Taboos.

Taboos are time bound.
Yesterday's taboos are today's takeaways.
The right to privacy recomposes 
Taboo tunes,in terms of changing times.
Justice juxtaposes sections of law,
In line with interests of equality norms.
Equality cries are more empowering than
The edifices of tradition and morality.

The doors of justice are being knocked at,
For issues silly and serious alike,
Pushing them beyond their hinges.
Lesbian or licentious,people are gay now,
Transcending barriers of sex or gender.
Adultery has shed its archaic stench.
Pilgrimage has its pocket full of roses,
Pushing the gender-free fragrance, 
Into the flames of deities of celibacy.

'Spare the rod and spoil the child'is also seen
As a taboo maxim,because people chew liberty
As a sweeter goal than lofty learning codes. 
The curriculum gates have said goodbye to canes
Lest the wards and their warring parents,
Should bang the doors of justice to spare the child.
Future grandmas will have more stories to spin and yarn,
As the cries for privacy,crack taboos for many a new dawn.

    { Note:- 'gay' here exclusively means 'cheerful and happy'}
P. Chandrasekaran.




Monday, October 1, 2018

எங்கே மகாத்மா?


இங்கே இன்று  மகாத்மா இல்லை;
ஆனால் மகாத்மாவைப் பற்றி,
விதவிதமாய் விமர்சனங்கள் உண்டு.
இங்கே மகாத்மாபோல் புன்னகை உண்டு;
ஆனால் புன்னகையில் புனிதம்  இல்லை.
இங்கே மகாத்மாவின் எளிமை உண்டு;
எளிமைக்குள் ஏராளமாய் ஏய்ப்புகள் உண்டு.
இங்கே மகாத்மாவின் பணிவு உண்டு;
பணிவுக்குள் பலமாய்ப் பாசாங்கு உண்டு.

தரித்திரத்தைத் தத்தெடுத்து சட்டை களைந்து
சரித்திரம் படைத்த  மகாத்மாவின் மண்ணில்,
உரைத்திடும் சொற்களின்,பொய்யிலும் புரட்டிலும் 
சறுக்கிடும் சத்தியம் தரித்திர மாகிட,
ஆண்டுக்கு ஆண்டு ஆத்மா தொலைத்து, 
மகாத்மா பெயரில் விடுமுறை போற்றி 
மகத்துவம் அவருடன் மன்பதை புதைத்து, 
'மாண்புகள்' கண்டதே மகாத்மா தினமோ? 
மனிதம் மறந்திட,மகாத்மா எங்கோ ?
                              {மன்பதை--Society}      

ப.சந்திரசேகரன் .    

The Happenings Happen


Time is a rattling runner,like a nomad;
To call him a happening,is wholly mad.
Time knows,not stories of joy or grief;
Nor does he pass for any event's relief. 
Happenings happen high,low and even,
As if it is Time's spell of hell or heaven.
Life's stumbling blocks become time's curse,
Locking the fact,that it is our moves'reverse.

Happenings happen not at the behest of Time;
Nature for instance has its rhetoric and rhyme.
All happenings here,are maximally man made,
Making them look,as if they are Time's tirade.
Time is absolutely an abstract flow on the run,
With happenings heckling its flow,just for fun.
P.Chandrasekaran.