Thursday, September 28, 2017

மாயா.



படியேறு!
முதல் படியிலேயே மூச்சு முட்டுகிறாய்.
ஏறும் படிகளை எண்ணிக்கொண்டிருந்தால்,
ஏற்றமே சுமைதான்;
ஆற்றத் தெரிந்த மனமே
ஆறுமாம் அனல் கடந்து .
பொறியில் இருக்கும் எலிக்கோ
பிடிபட்டக் கவலை!
மறியல் புரியும் மனதிற்கோ,
மாற்றமுடியாக் கவலை.
வெறியில் ஆடிய ஆட்டத்தை
வெற்றிடம் நிரப்புமோ?
அறியாப் பிழைகளை,
படிகள் ஏறிட,
படிப்படியாகக் குறைத்துக் கொள்.
இறுதிப்படியில் இளைப்பாறுவாய்!
பொறியில் எலிக்குப்புலருமோ பொழுது?
பொறுமை இழந்திடின்,பலிக்குமோ கனவு?
வெறுமை அறிதலே வேள்வியின் வீச்சு.
முறியடி முனகலை;முற்றிடும் மனமே.
                                                ப.சந்திரசேகரன்       

No comments:

Post a Comment