Friday, September 15, 2017

ஒளியினில் கரைதல்,



எரிந்தே கருகிய திரியொன்று  திரும்பி
எண்ணையைக் கண்டு  எரிந்து விழுந்தது.
"உன்னால் என்னாயுள் தீயினுள் தீர்ந்தது".
திரியின் ஒளிக்கென தீர்ந்திட்ட எண்ணையோ,
திரியை நோக்கி எகிரிப் பாய்ந்தது.
"உன்னொளி உயர்த்திட ஒழுகியே ஒழிந்தேன்" 
உருகிடும் மெழுகும் ஒளிதரும் திரியும்,
உடன்படா இயக்கம் உள்குத் தாகும் .
பருகிடும் உணவே பாழ்நஞ் சாகுமோ
இருமனம் இணைவதே திருமண மென்பர்;
ஒருவழி போகா இல்லற மென்றும்,
உருப்படி யாகுமோ உலையாய், உணவாய்!
தியாகச் சுடரென தீபமாய் எரிதலே,
யாகம் போற்றிடும் இறையொளி யாகும்.
சேர்ந்து உயர்த்தலே சேவையென்  றாகுமாம்;
சேராது அழிதல் சேதார மாகுமாம்.
எண்ணையும் திரியென ஒன்றாய் இளைத்தலே,
மண்ணில் ஒளியென, மானுடம் காக்குமாம். 
                                                          ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment