பத்துநாள் பங்காளிகள்! படிகள்பல கண்டவர்கள்!;
மொத்தமாய் பரணியேறி, மூட்டைக்குள் குடியிருந்து,
கெத்தாய் மீண்டுமிங்கே களிப்புற படியமர்ந்து
சுத்தமாய் மனதினில் சொர்க்கம் சேர்ப்பவர்கள்.
உத்தம அவரோடு,ஊரெல்லாம் கொண்டாட்டம்.
பித்தனின் பார்வதியும், பரந்தாமன் பரிமளமும்,
நித்தமும் படைத்திடும், நான்முகன் வாணியும்,
யுத்தங்கள் புரிந்திங்கே தீமைகள் துரத்திட,
வித்தைகள் பலவாகி,வேட்கைகள் வேரூன்றி,
சத்தியமும் சாத்திரமும் சான்றுகள் உரைத்திட ,
இத்தரையின் இருளகற்றும் இதிகாசம் தன்னை,
சத்தமாய் முழங்கிடுவோம்,சங்கீத சாசனமாய்!
சொத்தினும் மேலெனப் போற்றிடும் பொம்மைகள்,
சித்தரின் சீலமும் செயலாக்க நெறிகளும்,
பத்துநாள் பரிசாக,நித்தமும் அளிக்குமாம்.
அத்தனை நன்மையும் அருளோடு அரும்பிடவே,
சத்தான உணவென்னும் சமூகப் பிணைப்பில்,
பத்தானை பலம்பெற்று,பரிவோடு இணைவோம்!
ப.சந்திரசேகரன் .
Navaratri is televised beautifully in this poem.
ReplyDeleteThanks a lot
ReplyDelete