மாயா!
மெரினா கடற்கரை:
சமாதிகள் மட்டுமல்ல இங்கே;
சரித்திரம் படைத்தவர்களின் சிலைகளும்,
சிரிப்போடு கரங்கோர்க்கும் காதலரின் கனவுகளும்,
காளைகளைத் தழுவத்துடிக்கும் போராட்டங்களும்,
அவ்வப்போது அரங்கேறும் ஆடுகளம்.
அதிசியமாய்ச் சிலநேரம் ஆன்மாக்களும் பேசுமோ?
இதிகாசம் படைத்த தலைமைகள் தவித்து,
இறக்கும் தருவாயில் சொல்லத் துடித்த
பிறக்காத சொற்களை பிரசவிக்க,
திறக்காத வாய்திறந்து தெளிவுகள் கிட்டுமோ!
வெறிச்சோடிய நெஞ்சம் விம்முவதை காணாயோ!
.
ப. சந்திரசேகரன் .
No comments:
Post a Comment