Wednesday, February 1, 2017

மாயா .



                                  மாயா .

ஆன்மா!
அறிவா உணர்வா?
அகமா புறமா?
அழிவின் சுகமா"
மொழிக்குள் அடங்குமா?
முறையாய் விளங்குமா?
இறைமை  இணையமா?
இறப்பின் தோற்றமா?
தேடிடும் வாழ்வின்
தேடலைக் கடந்து,
கோடிட்ட இடத்தை
கூடிடா வெறுமையா?
நாடித் துடிப்பை
நுணுகி அறிந்தோரும்
நான்மறைக் கற்று
மேன்மை கொண்டோரும்
வானெழ வினவுதல்,
கூன்பிறையோ முழுமதியோ
மரணமெய்தா மானுட ஆன்மா?  
                                          ப. சந்திரசேகரன்  


No comments:

Post a Comment