Tuesday, February 28, 2017

Indicators.

           Indicators.


My parents were not my indicators.
But their love indicated the fact
Of my being what I am today.

My siblings are not my indicators.
But they indicate the difference
In inheriting parental attributes.

My friends are not my indicators.
But their supplements do indicate
That my nature is attired by them.

My children are not my indicators.
But they indicate my actual worth,
In striving to see a bit of me in them.

The society is not at all my indicator;
But it indicates how it holds my soul,
Hanging between peace and perjury.

My body and mind are not my indicators;
But they poke my failures, with poring fun
For not marking my track, after many a run .
                                          P.Chandrasekaran. 

Saturday, February 11, 2017

தி. மு. க செயல் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் .

அன்புள்ள திரு ஸ்டாலின் அவர்களுக்கு,
அரசியலில் அலுப்புத்தட்டும் அளவிற்கு அடைமொழிகள் தேவையா என்பது மட்டுமே குறித்த ஒரு கடிதம் இது. மக்களை நேரிடையாக மட்டுமே அணுகமுடிந்த காலகட்டத்தில், மொழி அலங்காரமும், அடைமொழிகளும் தேவைப்பட்டன.இப்படித்தான் கடந்த நூற்றாண்டில் தந்தை பெரியார், கர்மவீரர், அறிஞர், கலைஞர், நாவலர், மக்கள் திலகம், நடிகர் திலகம், போன்ற சொற்கள் உலாவந்தன. ஆனால் இன்றைய தொழில் நுட்பத்தில், சமூக வலைத்தளங்களும் மின் அஞ்சலும் பிரபலமாகிவிட்ட தருவாயில், அரசியல் தலைவர்களின் ஏற்கனவே செல்வாக்கு பெற்ற   பெயர்களை  பின்னுக்குத் தள்ளி , அவையில் கூட அடைமொழிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதோ கட்சித்  தலைவரின்  பெயரை  அங்கத்தினர்கள்  பயன்படுத்த மாட்டார்கள் என்பதோ   எந்த வகையில் நடைமுறைக்கு உகந்தவை   என்று விளங்கவில்லை .மெரினா கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்து தமிழக மக்கள் பலரின்  மனசாட்சியின் குரலாக எழுந்த மதிப்பிற்குரிய ஓ பி எஸ் கூட, அடிக்கடி அடைமொழிகளைப் பயன்படுத்துவது தேவையில்லை என்றே தோன்றுகிறது. இன்றய சமூதாயம் பெரிதும் விரும்புவது செயல்களே தவிர அடைமொழிகளோ, அவசியமில்லா சொற்களையோ  அல்ல .சமீபத்தில் தமிழகம் முழுவதிலும் எழுந்த ஜல்லிக்கட்டு இயக்கம், அடைமொழிகளைக் கடந்து ஆக்கம் பெற்றது, 1965 இல் நடைபெற்ற, நானும் கல்லூரி மாணவனாகக் கலந்துகொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போன்று, செயல்களே பிரதானம் என்பதை உணர்த்தியது .எனவே தி மு க ஆட்சியில் ஒருகாலத்தில் மனிதர்கள் பெயர்தாங்கிய மாவட்டங்களும் போக்குவரத்துக் கழகங்களும் ஊர் பெயர்களையும் போக்குவரத்துத் துறையின் பெயர்களை மட்டுமே    தாங்குமாறு செய்தது போன்று, சமீபத்தில் தாங்கள் பேனர்களைக் குறைக்குமாறு அன்புக்கட்டளை யிட்டதுபோன்று, தங்களுக்கு கம்பீரம் சேர்க்கும் சிறந்த பெயருக்கு முன்னால் அடைமொழிகள் , அலுப்பு தட்டும்  அளவிற்குச் செல்லாதபடி  குறைத்துக் கொள்ளுமாறு, முடிந்தால் அடைமொழிகளையே தவிர்க்குமாறு அறிவுறுத்துவீர்களா? இதுவே முகநூல் மற்றும் ட்விட்டர் மூலமாக விடுக்கப்படும்  என் எளிய வேண்டுகோள்.
அன்புடன்,
ப சந்திரசேகரன்.
ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர்.             

Thursday, February 9, 2017

சொல் தோழா!

சொல் தோழா! 
"இன்றய உணவு என்ன? எங்கே ?எப்போது? 
உண்டா இல்லையா? இறைவனே அறிவான்" 
சொல்கிறது இஸ்லாம் .
உணவே இவ்வாறெனின்,உடமைகள் 
உறைவிடம் ஊர்திகள் உன்னுடையவோ?
உன்னுடையதே உறுதியில்லை என்றாகிட
உன்னுடையதல்லாதது உன்னுடையதாகுமோ?
ஊர்க்குருவி பருந்தாகுமோ?
உன்பெயரை அடைமொழிகள் அபகரிக்க
உன்பெயரே உன்னுடையதில்லையே !
உன்பெயரே உனக்கில்லை
பின் எப்படி,, உன் பிரதிநிதிகள் யார்,
அவர்கள் இன்று எங்கே
சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்,
என்று உன்னால் சொல்லமுடியும் ?
"ஊர்பற்றி எரிகையில் ஆளுனருக்கு
இதர சொந்த காரியங்கள் முக்கியமோ"
என்று கேட்கிறாயே ஆனால்
உன் பிரதிநிதிகளே உல்லாச ஊர்திகளில்
உவகைக் கூடங்களில் திரைமறைவாகிப் போனார்களே!
"நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்"
கெட்டது நிலை மட்டுமா நீதியும் நேர்மையும் நாணயமுமே
 உறக்கமில்லை தோழா மனஉளைச்சலில் . .

                                                ப. சந்திரசேகரன் .

Wednesday, February 8, 2017

மாயா!


மாயா!
மெரினா கடற்கரை:
சமாதிகள் மட்டுமல்ல இங்கே;
சரித்திரம் படைத்தவர்களின் சிலைகளும்,
சிரிப்போடு கரங்கோர்க்கும் காதலரின் கனவுகளும்,
காளைகளைத் தழுவத்துடிக்கும் போராட்டங்களும்,
அவ்வப்போது அரங்கேறும் ஆடுகளம்.
அதிசியமாய்ச்  சிலநேரம் ஆன்மாக்களும் பேசுமோ?
இதிகாசம் படைத்த தலைமைகள் தவித்து,
இறக்கும் தருவாயில் சொல்லத் துடித்த
பிறக்காத சொற்களை பிரசவிக்க,
திறக்காத வாய்திறந்து தெளிவுகள் கிட்டுமோ!
வெறிச்சோடிய நெஞ்சம் விம்முவதை காணாயோ!
.
                                                   ப. சந்திரசேகரன் .
 

Sunday, February 5, 2017

Oh, for Politics with Men.

Oh for Politics with Men.

No I am not a male Chauvinist.
But where are men in the power game today?
The field sleeps, sucking male pride out,
Through petticoat pacts of the power game.
God shuns men prostrating at the shrine,
And at the sites of power mongering,
With shameless severance of their body,
From the dignity of their soul and spirit;
Folded hands and falling feet falter and fail
To fix fidelity to its fragile frame,
Formed irreverently, as a half baked bread.
Yesterday's rituals have all turned rotten,
On account of pretensions of professed faith;
Oh!the field now longs for a brand of Goliath.
                                          P.Chandrasekaran.  

சொல் தோழா!

சொல் தோழா!
வேதனையின்  வேரெங்கே ?
விதையோடு மண்ணில் விழுந்திடுமோ?
முளைக்கியிலே வேரோடு இணைந்திடுமோ?
செடியாக அதன் கிளையாக மாறிடுமோ?
கனகாம்பரமும் கள்ளிச்செடியும்
அடுத்தடுத்தே வளர
கள்ளிச்செடி கனகாம்பரம் ஆகிடுமோ?
வேதனை முள்ளாகக் குத்திட
விதைத்தது காரணமோ,விளைந்ததே வேதனையோ?
சொல் தோழா சொல்.
                           ப. சந்திரசேகரன்  

Wednesday, February 1, 2017

மாயா .



                                  மாயா .

ஆன்மா!
அறிவா உணர்வா?
அகமா புறமா?
அழிவின் சுகமா"
மொழிக்குள் அடங்குமா?
முறையாய் விளங்குமா?
இறைமை  இணையமா?
இறப்பின் தோற்றமா?
தேடிடும் வாழ்வின்
தேடலைக் கடந்து,
கோடிட்ட இடத்தை
கூடிடா வெறுமையா?
நாடித் துடிப்பை
நுணுகி அறிந்தோரும்
நான்மறைக் கற்று
மேன்மை கொண்டோரும்
வானெழ வினவுதல்,
கூன்பிறையோ முழுமதியோ
மரணமெய்தா மானுட ஆன்மா?  
                                          ப. சந்திரசேகரன்