Monday, February 6, 2023

கலைஞரின் பேனா





கற்பனைகள் ஊற்றெடுத்து,  

கருத்துக்கள் பிரசிவித்து,  

கன்னியரின் கரம்வலுத்து,

காளையர்கள் களம்கண்டு

மூளையினில் முத்தெடுக்க,

வாய்வீச்சில் வாள்முளைத்து

வாழ்வியல் வென்றதுவே

வானுயர்ந்த தமிழ்ப்பேனா.   


வள்ளுவனின் வரியெல்லாம்,    

தெள்ளுதமிழ் தெளிவுகளாய்

அள்ளியள்ளிப் பருகிடவே,    

அறிவின் அருவிகளாய்

ஆற்றுப் பெருக்கெடுத்து,    

ஆக்கம் அகத்திரியாய் 

தாக்கம் வெளிச்சமென,

தரணியெல்லாம் தமிழ்முழக்கம்!.


அழகுதமிழ் எழுச்சியுடன் 

அன்றாடம் கரைகடந்த  

 ஆற்றல்மிகு பேனா,     

 வென்றதுவே அல்லாது  

 வேரறுத்த வேறுகதை,   

 யாருமிங்கே  கேட்டதில்லை.     

 ஆலமரமே கலைஞர்பேனா!   

 ஆட்சேபிக்குமோ மெரினா?

ப.சந்திரசேகரன்


1 comment: