Friday, February 10, 2023

பின் ஏன் இப்படி?

எறும்புக்கு

சர்க்கரை நோயில்லை.

யானைக்கு

யானைக்கால் வியாதி இல்லை.

குதிரையிடம்

குதிரைபேர ஊழலில்லை.

வரிக்குதிரைக்கு

வரியைப்பற்றி கவலை இல்லை.

கங்காருக்கு

காரே தேவை இல்லை.

ஒட்டகம்

ஒட்டிப் பிழைப்பதில்லை.

ஒட்டகச்சிவிங்கி

ஒட்டகத்திற்கு உறவில்லை.

கழுதைப்புலி

கழுதையுமில்லை;புலியுமில்லை.

எநத மானும்

அந்தமான் பற்றி  அறிவதில்லை.

ஒரு நாய்க்கும்

ஓநாய் பற்றி கவலை இல்லை.

ஒருநாளும் 

ஊர்க்குருவி பருந்தாவதில்லை.

பின் ஏன் இப்படி,

தாறுமாறாய்,ஏட்டிக்குப் போட்டியாய்,

பேர்களும் பேச்சுக்களும்,

காந்தி பற்றியும் நேரு பற்றியும்!

ப.சந்திரசேகரன்.






No comments:

Post a Comment