Saturday, July 17, 2021

குழப்பத்தில் தள்ளாடும் எதிர்க்கட்சிகள்

   தேர்தல் நேரத்தில் களம் கண்டு, பின்னர்தேமே'என்று இருப்பதல்ல அரசியல்.அது ஒரு ஆழ்ல்.அடித்தளம் வலுவாக இல்லையெனில்,ஆட்டம் காண்பதோடு நில்லாது,இடிந்து நொறுங்கக் கூடிய மண்கோட்டை.

   இந்த அரசியல் ஆட்டக்களத்தில்,ஆட்சியில் இருப்பது மட்டுமல்லாது, ஆட்சியை எதிர்த்து நின்று,ஆளுமையின் குறைகளையும், அனைத்து பிரிவு மக்களின் பிரச்சனைகளை யும் ,எதிர்பார்ப்புகளையும் பிரதி பலித்து, முறையான எதிர்கட்சியாக செயல்படுவதும்  உள்ளடக்கியதே, அரசியல் என்பதன் பொருளாகும்.

  ஆனால் இன்றைக்கு இந்திய அரசியலில் நாம் காண்பது என்ன?தேசிய எதிர்க்கட்சி கள் தேய்ந்து போய்க்கொண்டிரு க்கின்றன. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நாடாண்ட இந்திய தேசிய காங்கிரஸ் எனும் பேரியக்கம், 1960களிலிருந்து ஒழியா உட்கட்சி பூசலால், கொஞ்சம் கொஞ்சமாக ஒழிந்து கொண்டிரு க்கிறது.  

   மேற்கு வங்கம்,மணிப்பூர்,கேரளா ஆகிய மாநிலங்களில் வலுவாக வேரூன்றியிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள்,மாநிலங்களின் சூழ்நிலைக் கேற்ப கட்சி சித்தாந்தங்களை'சரிசெய்து'பலநேரங்களில் கொள்கையற்ற அரசியல் புரிவதால்,ந்த ஒரு மாநிலத் திலும் தன்னந் தனியாக தேர்தலை சந்திக்கும் நிலையில்  அவைகள் இல்லை.

   ஜனநாயக  தேர்தல் முறையில்,ஐந்து முறை முதல்வராய் தேர்ந் தெடுக் கப்பட்டு,நீண்ட காலம் முதல்வராய் இருந்த பெருமைக் குரிய, திரு.ஜோதி பாசுவின்  மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்டுகள் இன்று மறுவாழ்வு தேடிக் கொண்டிருக்கின்றனர்.கேரளத்திலும் அவர்கள் தனிக்கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்த தனி முத்திரை,தற்போது இல்லை 

   உதிரப்பிரதேசத்தை பொறுத்தவரை ஆட்சிக் காலத்திலேயே தனக்கு சிலை வைத்துக்கொண்ட செல்வி மாயாவதி,இன்று அரசியலில் எங்கே மாயமானார் என்பது கேள்விக்குறியே!

   சமாஜ்வாதி கட்சியில்  திரு.முலையம் சிங் யாதவ் அவர்களின் மகன்   திரு.அகிலேஷ் சிங் யாதவ் முதல்வ ராய் முளைத்து,குறுகிய காலத்தில் பதவியிழந்து துவண்டு போயிரு க்கிறார்.

 பீகாரில்  ஊழலின் பிடியில் உறைந்து போன லல்லு பிரசாத் அவர்களின் கட்சியின் பலம்,நிதிஷ் அவர்களிடம் நிலை கொண்டு விட்டது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சியினர் இருளில் இளைப் பாறு கின்றனர். 

   தேசிய எதிர்க்கட்சிகளுக்கு தேடலுமில்லை தேறித் திரண்டெழதிராணியுமில்லைமலைகளாய் மாநிலத்தில் மார்தட்டிய கட்சிகளோமறுமலர்ச்சி வேண்டி,காத்து நிற்கின்றன.

   தேசிய கட்சிகளோ,மாநில கட்சிகளோ, அரசியலில் ஆள்வது மட்டும் கடமையல்லநாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளை யும்,அப்பிரச்ச  னைகளுக்கான காரணங்க ளையும்,எதிர்த்து குரல் கொடுப்பதும்,மிக முக்கிய கடமையாகும்.

  ஆனால்,அவ்வாறு கடமையாற்றுவதற்கு அதற்குரிய அவையில், அவர்கள் இருக்க வேண்டுமே!அவையில் இடம்பெற முடியாததற்கு அவர்களின் அரசியல் தள்ளாட்டமே காரணமாகும்.எதிர்க்கட்சி களின் தொடரும் தோல் விகளுக்கான காரணங்கள் பலவாகும்.சரியான பிரச்சனைக்கு தவறாக குரல் கொடுப்பதும், தவறான பிரச்சனைகளை தூக்கி நிறுத்து வதும்,எதிர்க்கட்சிகளின் புரிதல் இயலா மையே! 

  இந்த பார்வை பலவீனத்திற்கு அப்பாற்பட்ட, மிக முக்கியமான தவறு, அடிமட்ட தொண்ட ர்களை அரவணைத்து,அவர்களிட மிருந்து அரசியல் களம் அமைக்கத் தவறுவது. கீழ் மட்டத்திலி ருந்து முறையாக தேர்தல் நடத்தி ஒவ்வொரு ஊரிலும் கட்சித் தலைமையை நிறுவி,ஆழமாக வேரூன்றிய ஒருசில கட்சிகள்,பெரும் புயல்கள் பலவற்றையும் எதிர் கொண்டு நிலைத்து நிற்கின்றன.

  அதற்கு இரண்டு அமைப்புகளை உதாரணம் கூறலாம்.ஒன்று திராவிட முன்னேற்ற கழகம் எனும்ஆழமான வேர்கள் கொண்ட அரசியல் கட்சி.  இன்னொன்று ஆர்.எஸ்.எஸ்.எனும் ராணுவ பயிற்சி போன்ற வழக்க முறை யில் உரமூட்டப்பட்டு,தீவிரமாய்  வளர்ந்த இயக்கம்.

  இவை இரண்டுமே எதிரும் புதிருமானவை. ஒன்று வடக்கில் வேரூன்றி யது.இன்னொன்று தென்னகமாம் தமிழ் நாட்டில் தரமாக தடம் பதித்தது. இவ்விரண்டு அமைப்புகளும் எந்த ஒரு சூழ் நிலையிலும் ஒரே அணியில் கைகோர்க்க என்றும் வாய்ப்பில்லை. 

   இந்த ஒப்புமையில் கூட பலருக்கும் எரிச்சல் ஏற்படக்கூடும்.ஏனெனில், ஒன்று அடிப்படையில் மதம் சார்ந்து நிற்கிறது. மற்றொன்று சமூக நீதி சார்ந்து நிற்கிறது. ஒன்று நேரிடையாக அரசியல் காணும் பலமுடையது; மற்றொன்று தனது மதகோட் பாடுகளுக்கு ஏற்புடையதாக விளங்கும் அரசியல் கட்சிகளுக்கோ இயக்கங்களுக்கோ,படைபலமாக  பின்நிற் கிறது.

   ஆனால்,இவ்விரு அமைப்புகளுக்கும் ஒரே ஒற்றுமை,முறையாக நிறுவப் பட்ட ஆணி வேரான தொண்டர்களும், அவர்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புமாகும்மேலும்,இவ்விரு அமைப்புகளும் அவை களின் வலுவான நோக்கங்கள் சார்ந்து நிற்கின்றனஅந்த நோக்கங் கள் மனிதம்  சார்ந்ததாகவும் மதம் சார்ந்ததாகவும் இருக்கும் பட்சத்தில்எந்தப்பக்கம் சாய்வது என்பது அவரவர் மன நிலையின்  வெளிப்பாடே!  

   எழுபது ஆண்டுகளைக் கடந்த தி.மு.க எனும் ஆலமரம் 1977 லிருந்து 1987 வரை, திரைப்படத்தால் வளர்ந்த,மக்களின் அபரி மிதமான செல்வாக்கு பெற்ற,எம்.ஜி.ஆர் எனும் ஒரு தனி நபரின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று,ஒருசில தலைவர்கள் கழகத்தை புறக்கணித்து எம்.ஜி.ஆர் பக்கம் நின்றபோதும், தளர்ந்து போகவில்லை.

   பின்னர்,எம் ஜி ஆரைத் தொடர்ந்து அவருடைய செல்வாக்கினை தன தாக்கும் திறமை கொண்ட,செல்வி.ஜெயலலிதா எனும் வலுவான பெண் தலைமையையும் எதிர்த்து நின்று,இருமுறை அவரின் கட்சியினைத் தோற்கடித்து ஆட்சியைப்பிடித்ததோடு நில்லாமல்,1967-இல்  தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கையில் இருந்த அதே வலுவுடனும் வீரியத்துடனும்,2021 -இல்  ஆட்சியில் நிற்பதற்கான காரணங்கள் மூன்று:-1}சரியான தலைமை 2} காலம் மாறிடினும் உணர்வுகள் மாறாத உள்கட்டமைப்பில் ஒன்றிப் போன தொண்டர்கள் 3}மாநில உரிமைகள் விட்டகலா அரசியல் பாரம் பரியம் 

   இந்த மூன்று அடித்தளங்கள் ஆட்டம் கண்டு கொண்டிருப்பதே,காங்கிர சின் மீளமுடியா தோல்விகளுக்குக் காரணம்.காங்கிரஸ் கட்சி விழித்தெழ வேண்டும்.உட்பூசலை களையெடு க்கவேண்டும்.இளைய தலைமுறைக்கு உரிய இடம்தர வேண்டும். ஒற்றைக்குடும்பத்தில் பசையாய் ஒட்டப்பட்ட நிலை அகன்று, அக்குடும்பத்தில் இன்றைக்கு துணிவுடனும் திறமையுட னும் தலைமை பொறுப்பை எவரும் ஏற்க முன்வராத சூழ்நிலையில்,கட்சி யில் முறையாகத் தேர்தல் நடத்தி, உகந்த தலைமை ஒன்றை முன்னிறுத்த வேண்டும்.

   அதோடு நின்றுவிடாமல்,கீழ் மட்டத்தில் மிச்சம் மீதி தொண்டர்கள் இருப்பின், அவர்களுக்கிடையில் தேர்தல் நடத்தி, உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவையில் ஏதேனும் ஒன்றாவது சாத்தியமா என்து,  இப்போது கூட முயலாவிடின்,காங்கிரஸ் எனும் பேரியக்கம் முடிந்தகதை ஆகிவிடும். 

  இதர மாநிலம் தழுவிய கட்சிகள்,தேசியப் பார்வையை விசாலமாக்கி, நாற்காலிகளைக் காட்டிலும் நாடும்,நாட்டு மக்களும் முக்கியம் என்று, சிறிதேனும் நினைத்துப் பார்க்க முன்வர வேண் டும்.செய்வார்களா? 'அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; பகைவரும் இல்லை'என்று அடிக்கடி சொல்லி தங்களுடைய சந்தர்ப்பவாதத்திற்கு சப்பைக்கட்டு  கட்டும் இவர்கள், மக்களும், மக்களின் பிரச்சனைகளும் ட்டுமே என்றென் றும் நிரந்தரம்,என்பதை உணரவேண்டும். 

   இந்திய தேசிய அரசியலில்,முன்பு எப்போதும் இல்லாத அளவு எதிர்க் கட்சிக ளிடம் ஒரு தேக்க நிலை காணப்படு கிறது. அமெரிக்கா இங்கி லாந்து போன்ற நாடுகளில் இருப்பது போல, வலது சாரி, இடது சாரி என்ற கொள்கை ரீதியிலான இரு அணிகள் அல்லது  மக்களின் உணர்வுகளை யும் தாக்கங்களையும் நிசமாக பிரதிபலிக்க த்தக்க வேறு அணிகள் அமைவதில், தள்ளாட்டம் ஏன்? 

   நாடு பெரியது என்பதைக் காட்டிலும்தகுதிகளுக்கு அப்பாற்பட்டு'நீ  பெரியவனா நான் பெரியவனா'எனும் தன்னிலை ஆட்கொண்ட,அதிகாரம் சார்ந்தஅதிகார த்தின் பலன்கள் சார்ந்த,ஆதிக்க மன  நிலையே காரணம். 

 குழப்பத்தில் ஊறிப்போன தலைமைகளும்உட்கட்சி கட்டமைப்பைப் பற்றிகொஞ்சமும் கவலைப்படாத,சாம்ராஜய சிந்தனையும்,குறு நிலமன்னர் கள் போன்ற மனப்போக் குமே, இந்த தள்ளாட்டங்களுக்குக்  காரணமாகும்                                                  

  இந்த மாபெரும் தள்ளாட்டமேஒற்றை க்கட்சி ஆட்சியின் துள்ளாட்டங் களுக்கு,வழி வகுக்கிறது. மக்களோ,'நீங்கள் எவ்வளவு அடித்தாலும்  நாங்கள் தங்குவோம் எனும் மனநிலையில் இருக்கின்றனர்எனவேஎதிர்க் கட்சியினர் விழித்தெழும் வரைஅவர்கள் நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும்  உண்மையாக கவலைப் படுகிறவரை,இங்கு ஒற்றைக்கட்சியின் ஆட்சியே

   பதவிக்காகக் காத்து நிற்கும் அரசியலும், 'நரி வலம் போனாலென்ன,இடம் போனாலென்ன,நமக்கு பாதிப்பில்லாமலிருந் தால் சரி'எனும் மக்கள் மனப்பான்மையும் நீடிக்கும்வரை,ஒற்றைக் கட்சியின் பலம் முறுக்கேறி,தனிமனித உரிமைகளும் மாநிலங்களின் உரிமைகளும்  ஒவ்வொன்றாக பறிபோகும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எதிர்க்கட்சிகளின் தள்ளாட்டங்கள் தொடர்கதையாகிடமக்களாட்சித்  தத்துவங்களும் நடைமுறை களும்,மண்ணுக்குள் புதையும் நாள்,குறித்து வைக்கப்பட்டதாக முடிவுகொள்ளலாம்.

  வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் ஆளும் கட்சியினரின் அதிகார அத்துமீறல்கள் அதிகமாவதும்,எல்லை கடந்த ஆளுமை,எல்லா நிறுவனங்களிலும் ஊடுருவும் காரணத்தால்,பல நேரங்களில் நியாயத் தின் குரல் நெறிக்கப்படுவதும்,வாடிக்கையே!. மேலும்,சட்டத்தின் பிரிவு களை தவறாக பயன்படுத்தும்  போக்குகளால்,சிலநேரம் அப்பாவிகள் காரணமின்றி தண்டிக்கப் படுவதும்,நெஞ்சு பொறுக்கா நிகழ்வுகளாகும்.

  குடியரசின் பலமென்பது,அரசின் ஆளுமைத்திறன்களையும்,ஆளுமைக் குறைப்பாடுகள் நிறைந்த அரசினை எதிர்த்து நிற்கும் எதிரக்கட்சிகளின் உறுதியான கொள்கை நிலைப்பாடுகளையும், உள்ளடக்கியது என்பதே, அறிவார்ந்த அரசியல் கற்றுத்தரும் பாடம்.எனவே, தள்ளாடும் எதிர்க் கட்சிகள் தாமதிக்காது, அவர் களின் ஜனநாயகக் கடமைகளை தார்மீக உணர் வோடு மேற்கொள்வதே, குடியரசைக் காத்திடும்,தவிர்த்திடக்கூடா பாதையாகும்.

ப.சந்திரசேகரன். 

No comments:

Post a Comment