கட்டி வைத்தால்
கோயில் யானை.
கட்டுக் கடங்காது
தரிகெட்டுத் திரிகையில்
கொலைவெறி கொம்பன்.
குத்துவர் தொலைவூசி;
பித்தம் போக்கி
சித்தம் குலைத்து
பொத்திப் பிடித்திடுவர்,
போரிடும் கொம்பனை!
கிட்டத்தில் வைத்து
கிளர்ந்து கொஞ்ச,
களிறொன்றும் கிளியல்ல.
தொற்றும் அதுபோன்றே!
முகக்கவசம் முறை தவற,
இடைவெளிகள் இளைப்பாற,
தடுப்பூசிக் கயிறுமின்றி
கடுங்கொம்பன் ஆகிடுமாம்,
விட்டொழியா கொடுந்தொற்று!
தொற்றுக்கு அஞ்சாதோர்
தடுப்பூசிக் கஞ்சுவதேன் ?
துடுப்பில்லா படகுபோலாம்,
தடுப்பூசித் தடுமாற்றம்.
தடுப்பூசி வேலிக்குள்
தட்டாமல் கட்டிவைப்போம்
கொடுங்கொம்பன் கோவிடினை!
{குறிப்பு:- தடுப்பூசி பரிந்துரைக்கப்படாத பிரிவினருக்கு இது பொருந்தாது}
ப.சந்திரசேகரன்.
Super sir.
ReplyDeleteThank you Professor.
DeleteSuperb Sir
ReplyDeleteThank you Madam.
Delete