Thursday, April 23, 2020

'லாக்டவுன்' {Lock down}

இது  தேதிகளின்,கிழமைகளின், 
'அம்னீஷியா' காலம்;
சின்னத்திரை சீரியல்களின்,
தற்காலிக 'கோமா' கோலம்.
தொலைக்காட்சித் திரைப்படங்களின்
தொற்றுப் பரவலில்,
'இன்சோம்னியா' இணைந்திடும் நேரம்;
'லாக்டவுன்' லாட்டரியில்
உடல்பெருக்கும் 'ஒபேசிட்டி' ஓலம். 
'வீட்டிலிருந்தே  வேலை'கலாச்சாரத்தின்
விஸ்வரூபப்  பிடியில்,
'ஹலூஸினேஷன் ஹார்ரர் ' 
துரத்திடும் தூரம். 
வேலைகள் நிலைக்குமோ,
சேமிப்பு குறையுமோ,
எனும் 'ஆங்ஸைடி நியூரோஸிஸ்' அவலம்!
சர்வதேசச் சந்தையில்
சவப்பெட்டி 'டிரேடிங்கில்',
பேரம்பெருகிடினும்,          
நேற்றுவரை 'டாஸ்மார்க்கில்' 
புதைந்தவர்கள் கூட,
இன்றைக்கு 'பிளாஸ்மாவில்' எழக்கூடும் 
எனும் நம்பிக்கை,நின்று  நிழலாடும்.
'லாக்டவுன்' இன்று 'பீக்கில்' இருந்தாலும் 
விரைவில் வெளிவருவோம் 'வாக்டவுன்' செய்து,
எனும் 'ஆப்டிமிசமே'திரும் .   
ப.சந்திரSekaran

2 comments: