Thursday, April 16, 2020

இடைவெளி இணைவுகள்

    கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்,நமது 
அன்றைய ஒரே பொழுது போக்கு வானொலிப் பெட்டியே.இந்திய வானொலி நிலையத்தின் இரவு நேர ஒலிபரப்பில்,அவ்வப்போது விளம்பர இடை வேளைகளில்,"இரண்டு குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி வேண்டும்"என்ற குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம்,இடைவிடாது கேட்டுக் கொண்டே இருக்கும்.
   அன்றைக்கே நம் பாரத பூமி இடைவெளியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தது. இப்போது  ஒரு கொடிய நோயினால் அது 'சமூக இடை வெளி' எனும் அறைகூவலாக மாறியுள்ளது.இது வரை 'கைகொடுக் கும் கை' என்று ஒலித்து,'தோழா தோழா தோளில் கொஞ்சம் சாஞ்சுக் கனும்'என்று பாடி, கட்டிப்பிடித்து பாசத்தை வெளிப்படுத்தி,கட்டிப் பிடித்து உருண்டு போராடி, வலிமையை வென்றெடுத்த பலருக்கும், சமூக இடைவெளி என்பது மிகவும் கசப்பான,மனம் ஏற்றுக்கொள்ளாத புதிய அனுபவமே .
   ஏனெனில்,நாம் இதுவரை இடைவேளை என்ற சொல்லுக்கு மட்டுமே  மிகவும் பரிச்சியம் ஆகியிருக் கிறோம்.திரையரங்குகளில் இடைவேளை,தொலைக் காட்சிகளில் திரைப்படங்களுக்கும் சீரியல்களுக்கு மிடையே,அடிக்கடி விளம்பர இடைவேளைகள்,என் பவை முனைப்புடன் நமது மூளைக்குள் நுழைந்து, இடைவெளியில்லாமல் நமக்கு இடைவேளையைத் தந்து கொண்டிருந்தன. ஆனால், இன்றோ,இடை வேளைக்கு இடங் கொடுக்கும் திரையரங்கங்கள் சமூக இடைவெளியின் தேவை காரணமாக, இடை வேளையின்றி மூடிக்கிடக்கின்றன!  
    திடீரென்று'இடைவெளி'என்ற சொல் இடையே நுழைகையில்,நமக்கு அது கடுக்காயும்,பாகற்காயும், சுண்டைக்காயும்,வேப்பிலையும்,ஒன்றாக அரைத்து வழங்கப்படும்,சற்றே குமட்டும்  மருந்தாகும்.
   நாம் இங்கே என்றைக்கு இடைவெளியை பயன் படுத்தியிருக்கிறோம்?நமக்கு இடைவெளி விட்டு வரிசையில் நின்று பழக்கமில்லை.அது ஆலயமாக இருந்தாலும் ரி,திரையரங்காக இருந்தாலும் ரி, ரேஷன் கடையாக இருந்தாலும் ரி,வரிசை என்பது, முண்டியடிக்கும்,போர்க்களம் போன்ற  அனுபவமே! 
    நம்மில் பலர் என்னறைக்கு இரு சக்கர வாகனங் களை உரிய இடைவெளி விட்டு, சாலைகளில் கடை களுக்கு முன்பாக நிறுத்தியிருக்கிறோம்?அடுத்தவர், சம்பந்தப் பட்ட கடைகளுக்குச் செல்வதற்குக் கூட, நாம் முறையான வழி விடுவதில்லை.சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போதும்,இடைவெளி என்பது நமக்கு இரண்டாம் பட்சமே! எப்படியாவது,நாம் அடுத்த வாகனங்களை முந்திச்செல்ல வேண்டும் என்பதே,எப்போதும் நமது இலக்கு. மற்றவர்களின் தேவைக்கும் அவசரத்திற்கும்,பெரும்பாலோர் உகந்த இடைவெளி கொடுப்பதே  இல்லை. 
   தற்போது,கொரோனா எனும் கொடியநோயின் கிடுக்கிப்பிடியில் உலகமே திண்டாட,உலக சுகாதார நிறுவனமும்,மற்றும் நம்மை ஆளும் அரசுகளும்  கட்டளை பிறப்பிக்க,சமூக இடைவெளியை கடை பிடிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஏனெனில்,என்ன தான்'அச்சம் என்பது மடமையடா' என்று சூளுரைத்தாலும்,'என்னை நோக்கிப் பாயும் தோட்டா'என்ற அச்சமே,அனைவர் மனதிலும் மரணத்தாண்டவம் ஆடிவருகிறது.{கவுதம் மேனன் தலைப்புகளுக்கு நன்றி.} 
   இன்றைய இந்த கட்டாயம்,நம்முடைய கலாச்சாரம் ஆகவேண்டும்.மக்கள்தொகை கட்டுக்கடங்கா நம்மைப் போன்ற நாடுகளுக்கு,ஒருவருக்கொரு வருக்கான சமூக இடைவெளிக்கு இடம் காணுதல், சற்று கடினமே! இருப்பினும் ,நிர்ப்பந்தங்கள் நிலை பெற்ற வழக்கங்களாகும் போது,அதற்கான வழி முறைகளும் காணப்படும்.
   புல்வெளியில்{இன்றைக்கு அவைகள் அரிதாகப் போயினும்}மேயும் ஆடு மாடுகள் கூட,தகுந்த இடை வெளியை பேணுவதை நாம் கண்டிருக்கிறோம். எனவே சமூக இடைவெளி பராமரிப்பு ஒருவருக்கொ ருவர் விருப்பமுடன் பகிர்ந்தளிக்கும்,அவரவர்க்கு உரிய இடமே!சேர்ந்து வாழ்தலின் புரிதலே,ஒருவரின் உரிமையில் இன்னொருவர் குறுக்கிடாதிருத்தலாம்!
    முடிவாக,சமூக இடைவெளி என்பது நாகரீகமான, ஒருவரை மற்றொருவர் மதிக்கும் சமூகத்தின் வெளிப்பாடே! இன்றைய நிர்பந்தங்களை நன்மை களாக்கி,சமூகம் மேம்பச்  செய்வோம்!அதுவே முறையான சமூக இணைவாகும்.    
ப.சந்திரசேகரன் . 

4 comments: