சித்திரை பிறக்கையில் விலகுமோ சீக்கு?
நித்திரை தகுமோ நிலம்நிறை இறைவா!
எமனின் பசிக்கு இன்றைக்கு அளவில்லை;
அம்மன் அருள்வாயோ,அவன்பசி அடக்கி!
உலகம் ஒன்றாகி ஒருநோயில் உருண்டிட,
புலரும் பொழுதுகள் புதுவாழ்வுக் கணக்கே!
குதூகலம் ஒருபோதும் பழங்கதை ஆகுமோ?
பதாகைகள் மானுடப் பண்டிகை படைப்பாம்.
சத்திரமே சொர்க்கமெனும் சராசரிச் சமூகம்,
சித்தரைப் போலொரு சித்தாந்தம் தரித்தது.
விமானச் சிறகுகள் விண்ணைத் துறந்திட,
வானம் வெறித்து வண்ணம் மெலிந்தது.
இலேசென நினைத்தது,ஈரக்குலை இடித்திட,
உலாவரும் பொழுதுகள் ஊனமுற நின்றது.
'இதோவொரு நிவாரணம்'எனுமோர் வழியை உதாரணம் காட்டுமோ சித்திரைத் திருநாள்?
ப.சந்திரசேகரன் .
Good.
ReplyDeleteசராசரி சமூகம் சித்தர் போல் ஒரு சித்தாந்தம் தரித்தது....... Classic Sr.
ReplyDelete