Friday, March 6, 2020

அன்பும் அழகும்





 {பேராசிரியருக்கு சமர்ப்பணம்}

அன்பும் அழகும் பண்பின் அகமென,

இன்புறும் பேச்சினை இயல்பெனக் கொண்டு
தன்பலம் தனக்குள் கொண்டநல்  மனிதரின்,
பின்பலம் நோக்கிடின் பெருமைகள் பலவாம்!

நண்பராம் கலைஞரின் நிழலெனத் ருந்து,
மாண்புறு இயக்கம் மாறா ஒருவரை,
ஈன்றவர் பெருமிதம்,தோன்றிய புகழே!
கூன்விழாக் கொள்கைகள் குரலுடன் ஏற்றி,
வான்வரை உயர்ந்த வல்லமை என்றும்,
காண்பவர் போற்றும்,கவர்ந்திடும் வழியாம்!

வீண்பழி விலக்கும் விவேகம் வென்று, 
தூண்களில் ஒன்றாய் நின்றவர் வீழ்ந்திட,
மாண்டவர் அவர்தம் மரபுகள் மீண்டும்,
கூண்டினைக் கடக்கும்,சிறகுகள் கொண்டு: 
நீண்டதோர் இயக்கம்,நிறுவிய தமிழுடன்
தாண்டிடும் தடைகள்,திராவிடத் தடத்தில். 
ப.சந்திரசேகரன் 

2 comments: