Wednesday, March 18, 2020

கொரோனாக் கொண்டாட்டம்

நான் கமலின்
கட்டிப்பிடி வைதியத்திற் கெதிரானவன்.
நெருங்கும் உறவுகளுக்கு  நெருப்பு;
விலகிய உறவுகளுக்கு  விளக்கவுரை.
நான் வணக்கத்தின் முகவுரை.
பறந்தால் விடமாட்டேன்;
இறந்தால் தொடமாட்டேன்.
குழந்தைகளின் கொண்டாட்டம்     .
முதியோரின் திண்டாட்டம்.
இயற்கை மாசுபடுவதைத் தவிர்க்கும்
இன்றைய ஸ்டாப் வாட்ச்.
சுத்தமான இந்தியா,
எனும் முழக்கத்தின் தேவதூதன்.
போராட்டக்களங்களில் என்னால்
இன்று நாடெங்கும், 
நூற்று நாற்பத்து நான்கு. 
பொருளாதார வீழ்ச்சியின்
சப்பைக்கட்டு காரணங்களுக்கு, 
நானே சத்துமாவு.
நேற்று 370 முக்கத்தால்,  
ஜம்மு காஷ்மீரில் கதவடைப்பு.
இன்று என்னால் உலகமே கதவடைப்பு. 
திரும்பிடும் திசையெல்லாம், 
தொலைபேசியில்  "லொக்  லொக்"
மருந்தொன்றும் இல்லாது, 
மக்களெல்லாம் " திக் திக்" 
 ப.சந்திரசேகரன் . 

1 comment:

  1. Shuttle thoughts in mail is more convinent for me than in what's up Sr. Any way comparisons of 307 and 144 much more interesting ...thank u Sr

    ReplyDelete