Monday, March 30, 2020

சரியெனப் பிரிவோம் !

ஒதுங்கி ருப்பதில்,
தனிமைப் படுத்துவதில்
உலகம்  அனைத்தும்,  
ஒருதிசை நோக்கியே!  
கிழக்கோ மேற்கோ, 
பழக்கம் மாறுதல், 
பாதையை வைத்தே! 
பேயினும் பெரிதாய் 
நோயொன்று நெறித்திட 
ஓய்விலா ஒதுங்கலே 
உலகொளி யாகுமாம். 
கரங்கள் கூடியே 
காட்டிடும் ஒற்றுமை, 
தரவழி காட்டுதல் 
கூப்பிய கரங்களாம். 
இணைந்திடும் எண்ணங்கள் 
இடைவெளி படைத்தது, 
அணைந்திடா விளக்கென 
மானுடம் காக்குமோ ?
உலகும் நாடும் 
விலகி இருக்கையில், 
நோய்களின் நெடுவழி 
தந்திடும் பாடம்,
மாய்ந்திடா உழைப்பினில்,
காய்ந்திடும்  பலரையும்  
சாய்ந்திடா வண்ணம், 
சாரமாய்த் தாங்கலே
பலியிடு வோமோ 
பகுத்தறி விழந்து?
சரியெனப் பிரிவோம் 
சரித்திரம் படைப்போம். 

ப.சந்திரசேகரன் . 

1 comment:

  1. அருமை ஸார். சாரமாய் தாங்குவோம்.. சகலரையும்..

    ReplyDelete