Saturday, October 26, 2019

வளர்பிறைக் கனவுகள்

            {இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்} 

விளக்குடன் வலம்வரும்  தீபத்தின் ஒளியில், 
அளப்பிலா ஆனந்தம் பெறுவோர் என்றும், 
இளைத்திடும் திரியைக் கருதுவ தில்லை.
முளைத்திடும் எதற்கும் முன்னுயிர் விதையே!

உளியென உணர்வுகள் செதுக்கிய சோகம், வெளியினில் தோன்றும் ஒளியினுள் மாயும்!
நளினங்கள் தோன்றும் நாற்புற வாயிலில்,
வளர்பிறைக் காட்சிகள்,வலியினை விரட்டும்!

மிளிர்வதும் மிரள்வதும் விழிகளின் நர்த்தனம்;  உளம்சுடும் உண்மைகள் மறைத்திடும் மெத்தனம். கிளர்ச்சிகள் திரியென எண்ணையில் கிடந்திட, 
விளிம்புகள் வார்த்திடும் விழிகளும் தீபமே!  


துளிர்த்திடும் மகிழ்ச்சியை தொடரச் செய்திட, 
தெளிவைத் தருதலே,எண்ணையும் திரியுமாம்.
களங்கம் கரைத்திடும் தீபத்தின் ஒளியென, 
தளர்ச்சிகள் தீர்ப்பதே,வளர்பிறைக் கனவுகள்.


               ப.சந்திரசேகரன் . 

1 comment: