Sunday, October 20, 2019

கல்லானது;கல்லாதது

கல்காரைக் கடந்தே,உயருமாம் கோபுரம்.
கல்லறை எட்டுமுன்,கல்லாததை கல்.
கல்லுளி மங்கனாய் காலத்தை கழிக்காதே!
கல் தூணும்,களைப்பாற்றும் தாய்மடியே.

கல்லானாலும் கணவராம் கற்காலந் தொட்டு; 

கல்லில் நாருரிக்கும் கலியுகக் கல்யாத்தில்,
கல்லாக் கட்டுவராம் தட்சணையை வரமாக்கி. 
கல்வெட்டில் கல்யாணம்,கடைமடைக் கதையாம்! 

கல்லுளியால் கல்லை,கடவுளெக் காண்கையிலே,

சொல்லுளியால் சிந்தையில் செதுக்கலாம்  நாகரீகம்;
கல்லாங்காய் ஆடியதோர் கள்ளமிலாக் காலம்போய்,
கல்லை விட்டெறிந்து கனிகாணும் காலமிது.

கல்லா
ப் பெட்டியொன்றே கரையேறும் வழியாகி,
கல்மிஷம் சகுனியெனக்,கடுநஞ்சைக் கலந்திட,  
கல்கண்டுக்  கருணை,அளவோடு அருமருந்தாய்
கல்லீரல் பலத்தோடு,சூதுகளைச் செரிப்பதுண்டு. 

கல்மழை சிலநேரம் காட்டாற்றைப் 
டைப்பதுபோல், கல்லாதது மலையெனினும்,கடுகுக்கும் காரமுண்டு; 
கல்மனம் கொண்டோரைக் கனிவாக நடத்துகையில்,
கல்லாத கல்வியும்,கடலாழம் காண்பதுண்டு. 
                                                                               ப.சந்திரசேகரன் . 

No comments:

Post a Comment