அகடம் அனைத்தும் அறஞ்செயல் ஆகிட
உகட்டிடும் உதிர்ப்பும் உவகை யாகுமோ?
மகுடம் சூட்டிட மமதை மலிந்திடின்
சகடச் சக்கரம் சறுக்கல் காணுமோ?
திகட்டா எதுவும் தரணியில் இல்லை.
மிகைப்படும் எதுவும் கடந்திடும் எல்லை!
திகைப்புகள் நிறைந்த திடுக்கிடும் நிகழ்வுகள் பகைப்பல பெருக்கி பழிச்சொல் தாக்கிட,
சகிப்புத் தன்மையே சாதனை படைக்குமாம்!
தகைமை என்றும் தன்னெறி காத்தலே.
தகடுகள் தடித்து தந்திரம் புகுத்திடின்,
விகடம் பெருத்து விடுகதை கூறுமோ?
புகட்டும் தருமம் பூசைக்கு மட்டுமெனில்,
பகட்டும் பதவியும் பரிசம் போடுமாம்!
வகிடுகள் இல்லா வஞ்சியர் தலையென,
முகடுகள் படைப்பதே முதுமறை அரசாம்.
நகைப்புடன் நாட்டை நடத்திடும் அரசன்
அகப்பகை அடக்கி அருளுடன் ஆள்வனோ?
புகைப்படம் போலொரு நிஜமிலா வாழ்வில்
அகப்படும் வெற்றியில் அடங்குமோ ஆளுமை?.
ப.சந்திரசேகரன் .
Note:-அகடம்--injustice,trick உகட்டிடும்--nauseating
உவகை--joy;சகடச் சக்கரம்:- wheel of a cart, carriage முகடுகள்--heights,peaks
No comments:
Post a Comment