Friday, July 19, 2019

தமிழ் வழி

வணக்கம் சொல்லும் வரமே  தமிழ்மொழி; 
இணக்கம் காணலே என்றும் ன்வழி. 
மணக்கும் மொழியினை மறுமொழி தாக்கிட, 
தணலைத் தாங்குதல்,தன்னிலை தாழ்தலோ?

ணையின் நீரென அலைகள் அடித்திட,
மணலில் வீடெனக் கரையுமாம் திணிப்பு. 
உணர்வுகள் உறைதல்,தமிழுக் கில்லை;
புணர்ச்சியில் புரிதலே,மொழியின் எல்லை.
  
திண்மை படர்ந்த தேன்தமிழ் செம்மொழி; 
உண்மை உரைத்தே உலகினை உயர்த்தும். 
பெண்மை,ஆண்மை,சக்தியும் சிவனெனில் 
தூணில் இறையென படர்ந்த நற்றமிழாம். 

கண்படும் திசையெலாம் காலடி பதித்து, 
புண்படும் பொழுதுகள் இதிகாச மாக்கி, 
பண்பல படைத்த மும்மொழி மிரளுமோ, 
பண்புகள் தொலைத்த படைகள் கண்டு?

காண்பதும் கேட்பதும் கண்ணிய மென்று, 
மாண்புகள் வகுத்தலே மொழிவழி இன்று. 
உண்பது சுவைக்கவே;உட்டுதற் கன்று.
எண்பித்து உயருமாம்,தமிழ்வழி வென்று.

Note:-ட்டுதற் கன்று-not to vomit
           எண்பித்து:-By proving
                                                    ப.சந்திரசேகரன். 

1 comment:

  1. பெண்மை,ஆண்மை,சக்தியும் சிவனெனில்
    தூணில் இறையென படர்ந்த நற்றமிழாம்.
    Classic...Life can't be boring people like u Sr why because there are infinite number of possibilities are there and waiting for one and all of us viz., reading valuable texts and writing too for others...Pls make them above millions Sr...
    n. balasubramonia pillai 05/107

    ReplyDelete