Monday, February 4, 2019

மயிலேறிய முருகா!


மலையேறிச் சென்றபின்
மயிலேறி னாயோ?
மயிலேறிய  மிதப்பில் 
மலையேறி னாயோ?
விலைபோகும் வினைகளால் 
தலையேறிய தவிப்பை,
மயிலேற முடியாமல்
மலையேறிச் சொல்கிறேன்!
தலையாயப் பண்புகள் 
தொலைந்துப் போனதெங்கே. 
ஒலிபெருக்கிக் கொண்டு
உன்பேரை உரைத்தாலும் ,
பலியாகிப் போவதெல்லாம்
குலம்காக்கும் குணங்களே!
துலாபாரத் தர்மம்கூட
தலைகீழாய்த் தவறிட,
வலிகளை வார்த்தைகளால்
ஓலமின்றி உன்காதில்,
ஒதும்வழிச் சொல்கிறேன்!
கலியுகத்தின் களங்கத்தில் 
நிலையான நன்னெறியை,
குலையாது காத்திடவே 
சிலையாக நில்லாது, 
லையாகி நின்றிடுவாய்,
மயிலேறி முருகா! 
ப.சந்திரசேகரன் .        

2 comments: