1}"உன்னைப் பிடித்திருக்கிறது"
2}"பைத்தியம் எனும்பேய்
உன்னைப்பிடித்திருக்கிறது"
3}"ஆம் உன்மேல் எனக்குப்
பைத்தியம் பிடித்திருக்கிறது"
4}"சொந்தக்காலில் நிற்காதவனுக்கு
பந்தக்கால்தான் குறைச்சல்"
5}"சொந்தங்களும் பந்தங்களும்
பந்தக்கால் தூண்களாய்
எனைச்சுற்றி இருக்க
எந்தக்காலும் பந்தக்காலே"
6}"'பிடியேன்' எனச்சொல்ல
பணம் இல்லாதவனுக்கு
'அடியே' எனஅழைக்க
வருவாளோ மனைவி!"
7}"அடியேன் இருக்கிறேன்
உனைக்காக்கும் ஆண்மையென;
படியேறிக் குடியேற
வருவாயோ பெண்ணே?"
8}"இடியே விழுந்தாலும்
என் இடத்தைவிட்டு
படிதாண்டி வருவேனா,
பாழும் உன்னை நம்பி!"
9}"முடிசூடிய மன்னரெல்லாம்
மூழ்கியது பெண்ணாலே!
படியாத உனைச்சுற்றி
பொழுதைக் களைவேனோ?
பிடிவாதம் வேண்டாமே
பொல்லாதது ஆண்சாபம்"
10}"நடுசாமக் கோழியென
நாள்முழுக்க கூவிடினும்,
விடிந்திடும் பொழுதுனக்கு
நான்வந்தால் மட்டுமே''
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment