Thursday, February 14, 2019

காதலர் தினம்

     {வேலன்டைன் தின வாழ்த்துக்கள் }
கண்களில் காதலுண்டு;
காதலுக்கு கண்களில்லை
கதைகளில் காதலுண்டு.
காதலுக்கும் கதைகள் உண்டு;
காதலுக்கு சாதியில்லை;
சாதிக்குள் காதல்,
அறவே இல்லை. 
காதலில் ஊடலுண்டு;
ஊடலில் காதலுண்டு.
காதலில்'நான்' இல்லை;
'நாம்' இன்றி காதலில்லை.
காப்பியக் காதலுக்கு அதிகாரமுண்டு; 
அதிகாரக் காதல் காப்பியமாவதில்லை. 
புரிவதற்காக இணைவதுண்டு;
இணைவதெல்லாம் புரிதல் இல்லை.
புரிவதும் இணைவதுமே காதலாம்;
ஆண்டில் ஒருநாள் காதலர் தினம்,
ஆயுள் முழுவதும் காதலின் தினம். 
ப.சந்திரசேகரன் .    

No comments:

Post a Comment