{அன்றைய,இன்றைய ஆசிரியர்களுக்கு,
ஆசிரியர்தின வாழ்த்துக்கள்! }
நிலம் சார்ந்து நீ ஊன்ற,
உன் பலம் சார்ந்து பலர் உயர்வர்;
வானுயரப் பறப்போர்க்கு
தூணுயர்த்தி துணைநிற்பாய்.
உறுதியாய் உன்னைப் பற்றி,
உளமார உயரம் தொட்டவர்
குனிந்துனைப் பார்ப்பதை
குறையெனக் கொள்வர்.
மற்றவர் இலக்கை
மனதில் கொண்டு,
படிகளின் பாரம்
பிறர்க்கென சுமப்பாய்.
படிகளால் படித்தவர்,
பயனுறப் படிப்பர்.
படித்தபின் படிகளை,
அடியோடு துறப்பர்.
ஏற்றிடும் வரை நீ ஏணி!
ஏற்றிய பின்னரோ,"யார் நீ? "
{சிகரம் தொடச் செய்யும் ஆசிரியரை
சிகரத்தில் வைத்து போற்றுவோம்}
ப.சந்திரசேகரன் .
ஆசிரியர்தின வாழ்த்துக்கள்! }
உன் பலம் சார்ந்து பலர் உயர்வர்;
வானுயரப் பறப்போர்க்கு
தூணுயர்த்தி துணைநிற்பாய்.
உறுதியாய் உன்னைப் பற்றி,
உளமார உயரம் தொட்டவர்
குனிந்துனைப் பார்ப்பதை
குறையெனக் கொள்வர்.
மற்றவர் இலக்கை
மனதில் கொண்டு,
படிகளின் பாரம்
பிறர்க்கென சுமப்பாய்.
படிகளால் படித்தவர்,
பயனுறப் படிப்பர்.
படித்தபின் படிகளை,
அடியோடு துறப்பர்.
ஏற்றிடும் வரை நீ ஏணி!
ஏற்றிய பின்னரோ,"யார் நீ? "
{சிகரம் தொடச் செய்யும் ஆசிரியரை
சிகரத்தில் வைத்து போற்றுவோம்}
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment