நீயும் நானும் ஓரினம்;
நமக்குள் காதல்
வல்லினமோ மெல்லினமோ,
இரண்டுமகன்ற இடையினமோ?
கண்கள் கதைசொல்ல,
பண்கள் பலவாகி,
மண்ணுக்கும் விண்ணுக்கும்
மலர்ப்பாலம் அமைத்து,
மனம் மணக்கக் காதலித்த
மகரந்தக் காதல்போய்,
புரியாத பாதையில்,
எரியாத தீசுமந்து,
விரிவாகும் காதல்,
பருவப்பயிர் கூட்டுமோ?
தனியுரிமை வென்று
தாக்கங்கள் படைத்து,
புதுப்பாதை செல்லுமிடம்,
நதிசேராக் கடலோ ?
புதிர்சேர்க்கும் கூடலோ ?
ப.சந்திரசேகரன் .
நமக்குள் காதல்
வல்லினமோ மெல்லினமோ,
இரண்டுமகன்ற இடையினமோ?
கண்கள் கதைசொல்ல,
பண்கள் பலவாகி,
மண்ணுக்கும் விண்ணுக்கும்
மலர்ப்பாலம் அமைத்து,
மனம் மணக்கக் காதலித்த
மகரந்தக் காதல்போய்,
புரியாத பாதையில்,
எரியாத தீசுமந்து,
விரிவாகும் காதல்,
பருவப்பயிர் கூட்டுமோ?
தனியுரிமை வென்று
தாக்கங்கள் படைத்து,
புதுப்பாதை செல்லுமிடம்,
நதிசேராக் கடலோ ?
புதிர்சேர்க்கும் கூடலோ ?
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment