சேவிச்சாதான் பகவான்னு இல்ல;
எல்லாரும் ஷேமமா இருக்கணும்கற
நெனப்பே, பகவான்தான்.
வேதம் படிச்சாலும் படிக்காட்டாலும்,
பாதம் மண்ணுல படறச்ச,
பூமிக்கு வலிக்குமேன்னு
பூவாட்டம் மனச வச்சுண்டிருந்தாலே,
வேராட்டம் பகவான் தங்கிடுவார்.
அர்ச்சதையை போட்டு
ஆசீர்வாதம் பண்றச்ச,
அன்பையும் மனசுல
அள்ளி தெளிச்சுண்டா,
அதுவே அர்ச்சன புஷ்பமாயி
பகவானோட அருள்,
பலமா பூர்த்தியாகும்.
பேசறச்ச பிரான்றவா மத்தியில,
நம்ம நாக்கில முள் மொளைக்காம
நாமளே பத்திரமா பாத்துண்டா,
நம்மள பகவான் பாத்துக்குவார்.
நம்மவான்னு இங்க யாருமில்ல;
எல்லா நல்ல ஜீவாத்மாவும்
நம்மவான்னு நெனச்சுண்டா போதும்.
நல்லவாளோட நியாயமா பழகி,
நல்லத நெனச்சு, நல்லத பேசி,
நல்லதையும் செய்யறச்ச,
நாலு வேதமும் நம்மள,
மளமளன்னு மத்தவாள் கிட்ட
கொண்டுபோய் மனசார சேத்துடும்.
ப.சந்திரசேகரன் .
Send this to your Brahmin friends. They might bless you or curse you of chase to strike. I call it a poet's riddle.
ReplyDeleteOr chase you
ReplyDeleteI have imagined everything as an Atman aspiring to become a part of the Bramman.
ReplyDeleteThis is a good moral piece.
ReplyDelete