Wednesday, March 7, 2018

பெண்ணே நீ வாழ்க!


{மகளிர் தின வாழ்த்துக்கவிதை--08/03/2018} 

பெண்ணே நீவாழ்க, பெருமதி சிரம்தாங்கி  !
பூமிக்கு பலம்கூட்டும் சாமிகள் பலவுண்டு; 
சாமிக்கு நிகரான சக்தியாய்த் தாயுண்டு .
அன்பும்  ஆளுமையும் அடிமனதில் தேக்கி, 
இன்புறும் பொழுதை ஆணுக் கற்பணித்து,  
விண்மீன் கூட்டமாய் விரைவதே பெண்மை! 
நெடுந்தூர நோக்கோடு,குறையை நிறையாக்கி,
இடும்பன் முன்னின்று குமரனைக் காப்பதுபோல்,
குடும்பம் காப்பதே பெண்மையின் மிடுக்காம்!

சிவனார் உடலினில் சரிபாதி சக்தியென்பர்;
தவமென ஆண்சுமை,பாதிப் பங்கெடுத்து,
கவனமாய்த் தேரோட்டும் சாரதியே பெண்மை!
பெண்ணீயம் பேசியே பொழுதுகள் களையாது,
நன்னயதால்,நற்புலனாய் நாள்தோறும் நின்று ,
பெண்மை போற்றலே பழுதிலாப் ன்டிவம்!
பெண்ணே நீவாழ்க,பெருமதி சிரம்தாங்கி ! 
உன்னால் உயர்வதுவே, உறவும் ஊக்கமும்.
எந்நாளும் நன்னாளே,உன்னாலே உலகிற்கு.
                                                                    ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment