கூடுங்கள்! கூடுங்கள் !
தொழுகையில் கூடுதல் தவம்;
தோழமையில் கூடுதல் போராட்டம்;
துணிச்சலுடன் கூடுதல் போர்க்களம்.
தூற்றிடக் கூடுதல் எதிர்மறை;
அறிவுடன் கூடிடின் அவைமாண்பு;
ஆனந்தக் கூடுதல் கொண்டாட்டம் ;
வரிசையாய்க் கூடுதல் அணிவகுப்பு;
வாழ்ந்திடக் கூடுதலே சமூகம்;
திரை மறைவில் கூடுதல் அரசியல்;
தீர்க்கமாய்க் கூடுதல் தீர்மானம்;
மனமுவந்துக் கூடுதல் திருமணம்;
மாதிரிக்குக் கூடுதல் கண்காட்சி:
களித்திடக் கூடுதல் இச்சைக்கே!
காத்திருந்து கூடுதலே இறையாண்மை .
ப. சந்திரசேகரன்.
தொழுகையில் கூடுதல் தவம்;
தோழமையில் கூடுதல் போராட்டம்;
துணிச்சலுடன் கூடுதல் போர்க்களம்.
தூற்றிடக் கூடுதல் எதிர்மறை;
அறிவுடன் கூடிடின் அவைமாண்பு;
ஆனந்தக் கூடுதல் கொண்டாட்டம் ;
வரிசையாய்க் கூடுதல் அணிவகுப்பு;
வாழ்ந்திடக் கூடுதலே சமூகம்;
திரை மறைவில் கூடுதல் அரசியல்;
தீர்க்கமாய்க் கூடுதல் தீர்மானம்;
மனமுவந்துக் கூடுதல் திருமணம்;
மாதிரிக்குக் கூடுதல் கண்காட்சி:
களித்திடக் கூடுதல் இச்சைக்கே!
காத்திருந்து கூடுதலே இறையாண்மை .
ப. சந்திரசேகரன்.
No comments:
Post a Comment